உயிர்மை பதிப்பகமாக வந்திருக்கும் சுஜாதாவின் தேர்தெடுத்த சிறுகதைகள் நூலினை அலசி ஆராய்ந்து தொங்கவிடப்பட்ட ஜெயமோகனின் விமர்சனம் இது.
சுஜாதாவின் நடை சிறுகதைக்கு உரியது. காரணம்:
- சுருக்கம்
- நேர்கோட்டில் வேகமாகத் தாவிச்செல்லும் இயல்பு
சிறுகதையின் செவ்வியல் [ஓ ஹென்றி பாணி] வடிவில் நம்பிக்கை கொண்டவர் சுஜாதா. இயல்புகள:
- சம்பவங்களை நம்பியே கதையை அமைத்தல்
- குறைவான கதைமாந்தர்
- சிறிய கால அளவு
- மையமுடிச்சு இறுதித் திருப்பத்தால் அவிழ்க்கப்படுதல்
அவரது கதைகளின் பலம்:
- வலுவான வடிவ உணர்வு
- நேர்த்தியான மொழியுடன் அமைக்கப்பட்டவை.
சுஜாதாவின் கதைகளின் பலவீனம்:
- பெரும்பாலான கதைகளில் அவரது கதைமுடிவுகள் இதழியல் எழுத்துக்கு உரிய எளிய உத்திவிளையாட்டாக உள்ளன. உதாரணமாக
- ஒரே ஒரு மாலை
- வழி தெரியவில்லை
- சென்ற வாரம்
- பொதுவான நியாயம் சார்ந்த முடிவுகூறலாக உள்ளன. முதலிய கதைகளைச் சொல்லலாம். உதாரணமாக
- அம்மா மண்டபம்
- கள்ளுண்ணாமை
- கால்கள்
- கரைகண்ட ராமன்
சுஜாதாவின் தொடக்கம்
- ஆங்கிலத்தில் ஹெமிங்வே முதல் ரே பிராட்பரி வரை பலர்.
- ஜானகிராமனில் இருந்து அவர் பெற்றுக் கொண்டது நுட்பமான தகவல்களை அடுக்கி கதை சொல்லும் முறை.
- அசோகமித்திரனில் இருந்து கறாரான விலகலை.
அவரது கதைகளின் வகை.
- நம் நினைவுகளை நுட்பமான தகவல்கள் மூலம் தூண்டி நடுத்தர வற்கவாழ்வின் செறிவான சித்திரம் ஒன்றை அளிப்பவை. உதாரணம் :
- மகன் தந்தைக்கு
- வீடு
- சிலவித்தியாசங்கள்
- செல்வம்
- எல்டொராடோ
- ரேணுகா
- . நம் தர்க்கபுத்தியை புனைவாட்டம் மூலம் சற்றே அசைத்து மேலே கற்பனைசெய்ய வைப்பவை. ஒருவகையான விடையின்மையை உணரச்செய்பவை. இதை அவர் அறிவியல் சிறுகதைகளைச் சார்ந்து உருவாக்கிக் கொண்ட எழுத்துமுறை எனலாம். உதாரணமாக
- பார்வை
- ரஞ்சனி
- நீர்
- நிபந்தனை
- நிதர்சனம்
- சாரங்கன்.
- உற்சாகமான கதைசொல்லல் மூலம் நம்மை புன்னகைக்க வைக்கும் கதைகள். உதாரணமாக
- சுஜாதாவின் தலைசிறந்த கதையாக நான் எண்ணும் ‘குதிரை ‘ இவ்வகையை சார்ந்தது.
- மாமாவிஜயம்
- சார் இந்த அக்கிரமத்தை
- ஒரு வகையான பகீரிடலை உருவாக்கும் கதைகள். கரிய நகைச்சுவை கொண்டவை. தார்மீக உணர்வை தொட்டு சீண்டுபவை. உதாரணமாக
- நகரம்
- முரண்
- நிலம்
- நொ ப்ரொப்ளாம்
- எப்படியும் வாழலாம்
- பாரீஸ் தமிழ்ப்பெண்
சுஜாதாவின் இக்கதைகளை விட மேலாக நான் புதுமைப் பித்தன், லா.ச.ராமாமிருதம், கு அழகிரிசாமி, தி ஜானகிராமன், அசோகமித்திரன் , ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி , கி ராஜநாராயணன் ஆகியோரின் ஆகங்களை முன்வைக்க காரணங்கள்
- சுஜாதா சிறுகதைக்குள் கவித்துவத்தை அடைவதே இல்லை . மேலான சிறுகதை ஒருவகை கவிதை – சுந்தர ராமசாமியின் பல்லக்குதூக்கிகள் போல.
- சுஜாதா தீவிரமான அறஎழுச்சியை அடைவதில்லை, உருவாக்குவதில்லை. மேலான கதைகள் காலத்தால் பழமைகொள்ளாத அறவேகம் கோண்டவை– அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் போல.
- சுஜாதா கதையில் ஒருபோதும் அவரை விலக்கிக் கொள்வதில்லை. மேலான கதைகள் எழுத்தாளனைவிட பெரியவை. அவனது அறிவையும் மனதையும் மீறி ஆழ்மனம் வெளிப்படுபவை. ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போல.
_o0o_
No comments:
Post a Comment