சிறிய நாவல்களில் விறுவிறுப்பிற்கு எப்போதும் பஞ்சமிருப்பதில்லை. இந்த நாவல் அட்டையில் தி.ஜானகிராமன் ஜெட் வேகத்தில் பயணிக்கும் படைப்பு என்று கூறுகிறார். அந்த அளவிற்கு வேகமும் விறுவிறுப்பிற்கும் குறைவில்லை.
கதாநாயகன் அமிர்ததிற்கு குழந்தைகள் இல்லை. நாற்பதுகளில் இருப்பவர், மனைவியிடன் சண்டையிட்டு ஒரு நாடக நடிகையிடன் சஞ்சலம் கொள்கிறார். தில்லியில் உயர்பதவியில் இருக்கும் இவர், அந்த நாடக நடிகையின் புத்திசாலிதனத்தால் மனம் திருந்துகிறார் அல்லது தெளிவுபெறுகிறார். இதுதான் ஹெலிக்காப்டர்கள் கீழே இறங்கிவிட்டன.
நாடகநடிகையின் சாதாரண பழக்கத்தில் சட்டென ஒருநாள் லாட்ஜிற்கு செல்வோமா என்கிறார். நாவலில் நாம் கொள்ளும் 'அழுத்தம்' இந்த இடம்தான். இந்த இடத்தை, பொதுவாக ஆண்கள் கொள்ளும் அசட்டுதன துணிச்சலை, அழகாக சொல்கிறார். எழுபதில் தொடர்கதையாக வந்த சிறிய நாவலென்றாலும் புத்திசாலிதனமான வரிகளாலும், கவித்துவமான வரிகளாலும் நம்மை கட்டிப் போட்டுவிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.
-o0o-
No comments:
Post a Comment