ஒரு சம்பிரதாய நிகழ்வாக சென்னை புத்தகக் கண்காட்சி மாறிவிட்டது. புத்தக வெளியீடு, புத்தக கலந்துரையாடல், புகைப்படம் எடுத்தல் என்று நிகழ்வுகள், மனிதர்கள் மாறினாலும், மாறுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வெளியீடுகளில் பெரிய சுணக்கம் இருந்தது. புனைவுகள் வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வெளியிட மறுத்த பதிப்பகங்கள் அதிகம். சில ஆண்டுகளாக பதிப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று புத்தகங்களை வெளியிட பதிப்பகங்கள் போட்டிபோடும் நிலை வந்திருக்கிறது. புனைவுகளில் கவிதையை போலவே சிறுகதைகள், நாவல்கள் வெளியாகும் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மற்ற ஆண்டுகளைவிட 2016-17ல் வெளியான சிறுகதை, நாவல்கள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன.
Showing posts with label book fair. Show all posts
Showing posts with label book fair. Show all posts
Tuesday, January 24, 2017
Monday, January 19, 2015
புத்தக அலமாரியும் ஷூஅலமாரியும்
புத்தகக் கண்காட்சியை காண செல்வதும் அதைப் பற்றி
கட்டுரை எழுதுவதும் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. புத்தகக்
கண்காட்சியைப் பற்றி எழுதும் எந்தஒரு கட்டுரையும் தினம் நடக்கும் ஒரு சாதாரண
நிகழ்வாகதான் பார்க்கப்படுகிறது செய்தி நிகழ்சிகளைப் போல, அறிக்கைகள் அறிவித்தல்போல,
புத்தகக்
கண்காட்சியின் கட்டுரைகள் வெளியாகின்றன. இதைப்
படிக்கிறவர்கள் அதிகமாகிவிட்ட ஈசல்களை
பிடிக்க எண்ணெய் தடவிய காகிதத்தை பயன்படுத்துவதுபோல கட்டுரைகளை வடிகட்டி கடந்து செல்கிறார்கள். கட்டுரைகளில் பேசப்படுகின்ற செய்திகளும் ஒன்றுபோல தங்களுக்கு
ஏற்பட்ட அனுபவங்களை ஒரே மாதிரி விளக்கி செல்வதுதான் எல்லா கட்டுரைகளிலும் காணக் முடிகிறது. அடுத்த ஆண்டும் வந்துவிடுகிறது, சென்னை
புத்தகக் கண்காட்சி போர்டில் முன்னால் இருக்கும் எண்ணில்
ஒரு எண் கூடிவிடுகிறது. அந்த ஆண்டு முந்தைய ஆண்டைவிட
எத்தனை அதிக பரப்பளவில் எத்தனை அதிக கடைகள்,
எத்தனை
பாப்க்கார்ன் கடைகள், எத்தனை தண்ணீர் தொட்டிகள் போன்ற
விவரங்கள் தாங்கிய அந்த படங்களுடன் கூடிய கட்டுரைகள்
வெளியாகி மீண்டும் பரபரப்பாகி விடுகின்றன. ஊடகங்களும் புத்தக கடைகாரரின் பேட்டியும்,
சாப்பாட்டு
கடைகளின் முதலாளியின் பேட்டி தொலைக்காட்சிலும் வாரஇதழ்களிலும் வெளியிட்டு மேலும்
பரபரப்பூட்டுகிறார்கள்.
Friday, January 10, 2014
நான் விரும்பும் பதிப்பகங்கள்
தமிழில் பதிப்பகங்களுக்கு
குறைவேயில்லை. பதிப்பக பட்டியலை மேலோட்டமாக நோக்கினாலே அதன் எண்ணிக்கை ஐநூறுக்கு மேலாக இருக்கும்
என தெரிந்துவிடும். ஒரு 100க்கு மேற்பட்ட
பதிப்பகங்கள் தீவிரமாக செயல்படுபவைகளாக இருக்கும். சில தொடர்ந்து செயல்படுவைகளும்,
சில தன் பழைய புத்தகங்களையே திரும்ப திரும்ப
அச்சிட்டு வெளியிடுபவைளும் உள்ளன. பல பதிப்பகங்கள் எதாவது ஒரு கட்டத்திலாவது தீவிரமாக
செயல்படுபவையாக இருக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)

