Showing posts with label bike. Show all posts
Showing posts with label bike. Show all posts

Wednesday, September 16, 2015

வாகனம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் இன்றைய தேதியில் பைக் வைத்திருப்பது ஒரு கெளரவமான விஷயமாக கொள்ளப்படுவதில்லை என்றார். அப்போது உண்மையில்லை என்று தோன்றியது. சில வருடங்களிலேயே பல்வேறு மாடல்கள் வந்து பைக் என்பது சாதாரண ஒரு நுகர்வுப் பொருளாக மாறி எல்லோர் கையில் இருந்தது. ஒரு புதுமாப்பிள்ளைக்கு பைக் வாங்கும் வரதட்சனை பந்தாக்கள் பெரிய கவனிப்புகளுக்கு இல்லாமல் போய்விட்டது. நான் சிறுவனாக இருந்தபோது என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு மாமாவிடம் ஒரு டிவிஎஸ் வண்டி இருந்தது.
அதை அவர் தினம் காலையில் துடைப்பதும், அந்த வழிய எடுத்துச் செல்ல குளத்திலிருந்து கலிமண்ணை எடுத்துவந்து கொட்டி கெட்டி படுத்தியிருந்தார். மழைகாலத்தில் சாதாரண மணலை போட்டால் கரைந்து ஓடிவிடும் என்பது அவரது எண்ணம். அந்த நேரம் அந்த தெருவில் இருந்தவர்களிடம் சைக்கிள் தான் இருந்தது. என் அப்பா ஒரு சைக்கிள் வைத்திருந்தார். அதை ஓட்டவே அவருக்கு சிரமாக இருந்தது. ஆனால் புல்லட், லம்படார் போன்ற கனமான வண்டிகளை வைத்திருந்தவர்கள் பரம்பரை வண்டி ஓட்டிகளாகவோ அல்லது பெரிய பலசாலியாக அல்லது வைத்திருக்கும் பணத்தை பந்தாவிற்கே செலவழிக்கும் ஒரு வகையினர் மட்டுமே வைத்திருந்தனர்.

Monday, August 31, 2015

விபத்து

இன்றுகாலை ஒகேனகலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் இறந்த செய்தியை படித்துவிட்டு அலுவலகம் வந்துக் கொண்டிருந்த வழியில் சற்று நேரத்திற்கு முன்னால்தான் மூன்று சக்கர மினிடெம்போ லாரியும் ஒரு மோட்டார் பைக்கு மோதிக்கொண்டிருந்தன லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை வைத்து பார்க்க என்ன நடந்தது என்பதை கணிக்க முடிந்தது. மினிடெம்போவிற்கு பெரிய சேதம் இல்லை. அதன் டூல்பாக் மட்டும் லேசாக ந‌சுங்கி இருந்தது. ஆனால் பைக்கில் முன்சக்கரம் இரண்டாக மடிந்துவிட்டது, அதில் வந்தவருக்கு ஊமைஅடி. லேசாக அழுது கொண்டிருந்தவரை ஓரமாக உட்கார வைத்திருந்தார்கள்.
விபத்துகள் ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் நம் கவனத்திற்கு வந்து கொண்டேதான் இருக்கின்றன. சில நம் கவனத்திற்கு வராததற்கு காரணம், அது அத்தனை கொடூரம் இல்லாததாக இருக்கும். கொடூரங்கள் நமக்கு பிடித்திருக்கின்றன. கொடூரமான காட்சிகளை டிவியில் பார்ப்பதும், சாலை விபத்துகளின் தொகுப்புகளை யூடியூபில் பார்ப்பதும் நம் மனதில் உள்ள கொடூர ஆசைகளை திருப்திபடுத்ததான்.

Wednesday, January 7, 2015

பெண்வாகனஓட்டிகளும் தொழிற்நுட்பமும்



இந்திய சமூகத்தில் பெண்கள் பலகாலம் வீட்டிலே அடைப்பட்டிருந்து சமீபகாலமாகத்தான் வெளியே வரஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மிகச் சமீபமாகத்தான் வாகனங்களை ஓட்டவும் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த மனநிலையை இன்று நாம் புரிந்துகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போதிலேயே, என் சகவயது பெண்கள் சைக்கிள் ஓட்டவரும்போது பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சரியல்ல என்று கூறப்பட்டது. மீறி ஓட்டுபவர்களை சிறுவர்களும் பெரியவர்களுமாக கேலி செய்திருக்கிறார்கள்.
இன்று எல்லாவகை இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை பெண்கள் ஓட்டுகிறார்கள். முன்பு ஒரு பெண் வேலைக்கு அல்லது கல்லூரி செல்ல அண்ணனோ அப்பாவோ கூடவந்து சைக்கிளில் அல்லது மொபெட்டில் அழைத்து செல்ல‌ வேண்டும். இன்று அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எங்கு செல்லவேண்டும் என்றாலும் பெண்களில் தனியாக தன் ஸ்கூட்டியில் செல்கிறார்கள்.