Tuesday, February 7, 2023

குதிரைமரம் & பிறகதைகள் தொகுப்பு குறித்து விஜயகுமார் சம்மங்கரை


 
அன்புள்ள அசோக்,

இன்று தங்களுடைய குதிரை மரம் வாசித்து முடித்தேன். வாசித்த கையோடு இந்த மடல் எழுதுகிறேன்.

அனைத்து கதைகளும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்தது. உங்களுக்கு மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. அனைத்து கதைகளின் முதல் பத்தியே அதற்கு சாட்சி.

குதிரை மரம் கதை தான் தங்களின் உச்சமாக நான் நினைப்பது. இனி நீங்கள் அந்த கதையை விஞ்சும் எண்ணத்தில் தான் மற்ற கதைகளை எழுதுவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மற்ற எந்த கதையிலும் இல்லாத ஆழமும் உண்மையும் அதில் தான் பொதிந்து இருப்பதாக படுகிறது.

ஒவ்வொருவருக்கும் இது தரமான கதை என்று சில அளவுகோல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை எந்த கதை நினைவில் நிற்கிறதோ அது நல்ல கதை. அது ஏன் நினைவில் இருக்கிறது என்று பிறகு ஆராய்ச்சி செய்வேன். உதாரணமாக குதிரை மரம் நினைவில் நிற்கும் கதை. காரணம் அதன் உண்மை தன்மை. அதாவது இலக்கிய மனம் அறியும் உண்மைத்தன்மை.

மற்ற கதைகளில் அது கதையாக வர வேண்டும் என்ற பிரயத்தனம் தெரிகிறது. அது நல்லதுதான். பல நல்ல எழுத்தாளர்களிடம் நான் அடையாளம் காண்பது இதுவே. ஆகையால் தங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அன்புடன்
விஜயகுமார் சம்மங்கரை



No comments: