Tuesday, May 5, 2020

சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்



தெருவில் ஓடும் ஒரு குழந்தை தடுக்கிவிழுந்தால், ஐயோ பார்த்துவரகூடாதா தம்பி என தூக்கிவிடும் அப்பாக்கள், தன் பிள்ளை விழும்போது சனியனே பார்த்துவரமாட்டியா என போட்டு அடிப்பதை பார்க்கும்போது நிஜமாகவே அவர்களுக்கு பிள்ளைகள் மீது பாசmaa அல்லது வெறுப்பா எதை எடுத்துக் கொள்வதா என குழப்பம் ஏற்படுகிறது. இதிலிருக்கும் உளவியலை எளிதில் புரிந்துக் கொள்ள முடிவதில்லை.

குறிப்பாக சிறுவர்கள் மீது அப்பாக்களுக்கு, தாத்தாக்களுக்கு இருக்கும் பாசம் அதிகமாகி வெறுப்பையே உமிழ்கிறார்கள் என தோன்றுகிறது. சிறுவன் மீது தன்னையே காணும் அவர்கள் அவன் செய்யும் தவறுகளை பொறுக்க முடியாமல் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். தன்னை விட கீழ் என்பதில் இருக்கும் வெறுப்பும் தன்னை விட மேல் என்பதில் இருக்கும் வெறுப்பும் ஒன்றல்ல.

தக்கையின்
மீது நான்கு கண்கள் சிறுகதையில் தாத்தாவிற்கு பேரனுக்கும் இடையேயான சிறு உரசல்கள், மனதில் சிறு போட்டியை வளர்த்துவிடுகிறது. அதிக மீனை பிடிப்பதில் இருக்கும் நுட்ப அறிவு யாரிடம் அதிகம் என்கிற எளிய சங்கதியை மனதில் நிறுத்தி, தன் தோல்விகளை மறைக்கமுடியாமல் வெளிப்படும் ஆத்திரத்தை கண்டு அவரே அதிசயிக்கிறார்.

தன்
வயதை, அறிவை, அனுபவத்தை, இத்தனைக்காலம் கட்டிக்காத்த அதிகாரத்தை ஒரு சிறுவன் உடைப்பது எத்தனை வலி நிறைந்தது. ஓடாத கடிகாரம் இருமுறை ஒரு நாளில் சரியான நேரத்தை காட்டுகிறது, அதற்கும் பயன்படாமல் போய்விடும் இந்த உடலை என்ன செய்வது, எளிதாக ஒத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறது மனது.

மாணிக்கம்
தாத்தா இறந்துபோன தன் மகளின் மகனை அடிக்க அவரால் முடியும். மகளோ மருமகனோ இப்போது இல்லை, தன் அதிகாரம் அவனிடம் செல்லுபடியாகும், தடுக்கும் ஒரு ஜீவன் தன் மனைவிதான், சிறுவனின் பாட்டி. தன் மன தோல்விக்காக அவளையும் அடித்து துவைக்கிறார். ஆனாலும் கடைசியில் தோல்விதான் வருகிறது.

மனிதர்களுக்கு
உண்மையாக இரண்டு விஷயங்களில் அக்கறை இருக்கிறது. ஒன்று தோல்வியை ஏற்றுக் கொள்வது, மற்றொன்று வெற்றியை எதிர்நோக்குவது. ஒருவகையில் சொல்வதானால் இரண்டும் ஒன்றுதான்.

(azhiyasudargal.wordpress.com)

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான விமர்சனம்
நன்றி