Thursday, May 7, 2020

நந்தா என் நிலா



நந்தா என் நிலா (1977) என்ற படத்தில் இடம்பெறும் பாடல் தமிழ் இசையுலகில் மிக பிரபல்யமானது. அப்பாடலை பாடிய எஸ்.பி.பி மேடையில் அதை பாடமுடியாத பாடலாக இன்றும் இருக்கிறது. வி.தெக்ஷ்ணாமூர்த்தி அவர்களது இசை, பாடல் இரா. பழனிச்சாமி.
இசையமைப்பாளர் வி. தெக்ஷ்ணாமூர்த்தி 1950ல் இசையமைக்கவந்தவர். ஆனால் தமிழுலகம் அவரை பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. மலையாள படஉலகில் பெரும் இசையமைபாளாராக இருந்திருக்கிறார். எம்.எஸ்.வி இங்கு கோலோச்சியது மாதிரி, தமிழனாக அங்கு வென்றிருக்கிறார். அங்கே என்றும் மறக்கமுடியா பல அருமையான பாடல்கள் இசையமைத்திருக்கிறார். 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் ஊதாப்பு கண் சிமிட்டுகிறது படத்தில் இசையமைத்திருக்கிறார். 93 வயதில் 2013ல் சென்னையில் இறந்தார்.

சரணம் இருசிறு பகுதிகளாக இப்பாடலில் இருக்கிறது. பல்லவிக்கு பின் நீண்ட அனுபல்லவி இடம்பெறுகிறது. துள்ளலாக பல்வேறு இசைக்கருவிகள் இசைக்கின்றன. அதிலும் அந்த வரிகளில் இருக்கும் அழகு, உவமைகள், தமிழ் சினிபாடல்களில் இடம்பெற்றதேயில்லை. சரணத்தில் வரும் வரிகள் கவிதையின் உச்சம். எழுதிய இரா. பழனிச்சாமி வேறு சில பாடல்களும் எழுதியிருக்கலாம். ஆனால் பிரபல்யமாக அறியபடவில்லை.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நல்ல இசை, அதன் பழமையை, ரசனையை கடந்தும் மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறது. அந்த மாதிரியான பாடல் இது. வி. தெக்ஷ்னாமூர்த்தி, இரா. பழனிச்சாமி இவர்கள் இருவரும் பெரியளவில் தமிழில் அறியப்படவில்லை என்றாலும் இன்றைய இசையைதான் இசைக்கிறார்கள் என்கிற எண்ணத்தை உருவாக்குகிறார்கள். அது போதும்.

நந்தா என் நிலா ஆஆ
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ வா

விழி மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா (நந்தா)

ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே (நந்தா)

ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாளோ
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ (நந்தா)

https://www.youtube.com/watch?v=BfnwV_IQDFo


2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் படித்தமான பாடல்

கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பிடித்தமான பாடல் (சென்ற கருத்தில் எழுத்துப் பிழை நேர்ந்துவிட்டது)