சினிமா, கலை, இலக்கியம்
போன்ற துறைகளில் இருக்கும் ஜாம்பவான்கள் நாம் கவனித்துக் அவர்களைப் பற்றி அவர்களின் வளர்ச்சியைப்
பற்றி சிலாகித்துக் கொண்டு இருக்கும்போதே
அவர்களின் விழ்ச்சியையும் கண்டிருப்போம். பெரிய அதிர்ச்சியை ஏற்படித்தியிருக்கும்.
சில நேரங்கள் அது ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அதுதான் அவர்கள் உயரம் என்று நினைத்திருக்கலாம். பலபேர் ஒரு சின்ன உயரம் அடைந்ததும்
அதற்குமேல் செல்லமுடியாமல் கீழே இறங்கவும் வழி தெரியாமல் பரிதவிப்பதை ஒவ்வொரு சமயமும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவரால் நாம் நினைத்திருந்த ஒரு உச்சத்தை அடைய முடியாமல்
போனதற்கு அவர்களின் அகங்காரமும் ஒரு காரணம் என்பதை அறிந்திருக்க ஞாயமில்லை. படைப்பாளியின் படைப்பு திறன் என்பது அவனின்
அகங்காரத்திற்கு எதிரானது. தன்னால் படைக்கமுடிந்ததைவிட ஒருபோதும் தாண்டி சென்றுவிடமுடியாது.
அகங்காரம் என்பது மனதில் இருக்கும் ஒரு சின்ன கர்வம் மட்டுமல்ல, தன் படைப்புஆழத்தை தொடமுடியாமல் போகசெய்யகூடிய
இடையில் வரும் ஒரு மந்திர கண்ணாடியும் தான். அக்கண்ணாடியில் தன் முகத்தை கண்டும் தன்
அழகைக் கண்டும் திருப்தியடைந்துவிட்ட ஒரு பரிதாபகரமான கலைஞனைதான் நாம் இப்படி நினைத்துக்கொள்கிறோம். இங்கே இன்னோன்றையும் சொல்லிவிடவேண்டும்.
தன்னகங்காரம் சின்ன எழுத்தாளனுக்கும் தேவையானது. அதுவே அவனை எழுத தூண்டும் ஒரு சக்தியாகவும்
இருக்கிறது. ஆனால் மற்றவர்கள் மேல் கொள்ளும் அதே அகங்கார துவேசம் அவனையே அழித்துவிடுகிறது.
ஜெயமோகன் எழுதிய கன்யாகுமரி நாவலின் மையம் இதுதான். நாயகன்
ரவிக்கும் அவன் கல்லூரி காதலி விமலாவின்
மேல் இருக்கும் ஈகோபோட்டிதான் கதையாக
கொள்ளலாம். ரவியும்
விமலாவும் காதலர்கள், ஒரு கூடலுக்குப்பின்
இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். ரவிக்கு அதற்கும்மேல் அவளிடம் அன்பு காதல் வரவில்லை.
அவளின் வெளிப்படையான அணுகுமுறை அவனை காயப்படுத்துவதாக நினைக்கிறான். அத்தோடு சில ரெளடிகளால் வன்முணர்ச்சி
செய்யப்படுகிறாள், அதை பார்த்த ரவி அவளை முழுமையாக வெறுக்கிறான்.
பின்னாலில் மலையாள திரையுலகில் முக்கியமான இயக்குனராக ஆகிறான்.
ஒரு ஹிட் மட்டுமே கொடுத்த அவன் மீண்டும் ஒரு நல்ல படத்தை இயக்க கன்யாகுமரிக்கு கதை
டிஸ்கசனுக்கு வருக்கிறான். 18 ஆண்டுகள் கழித்து வந்த அவன் விமலாவை
கன்யாகுமரியில் மீண்டும் சந்திக்கிறான்.
நடிகை பிரவீனா, உதவிஇயக்குனர் வேணு ஆகியோருடன்
அவர் செய்யும் கதை டிஸ்கசனில் அவனால் முழுமையாக கலந்துகொள்ள முடியவில்லை. வேணுவின்
அகமனதில் விரியும் கதை சரியாக அவனால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. மீண்டும் மீண்டும்
விமலாவை சந்திக்க நினைக்கிறான், அவள் தன்னிடம் அடிபணியவேண்டும்
என நினைக்கிறான். ஆனால் அவளின் உலகம் முற்றிலும் மாறி முழுமையான படைப்புமனத்துடன் இருக்கிறது.
தான் கொண்டிருக்கும் ஆராய்ச்சி, பரிசோதனைகளில் அவள் மனம் முழுமையாக
இருக்கிறது. வன்புணர்ச்சியின் தாக்கம் நீங்கி உறவிற்கு ஒவ்வொருவனை வைத்துக்கொள்ளும்
மனநிலையில் இருக்கிறாள்.
ரவியின் மனம் மிக சம்பிரதாயமானதாகவும் மிக சாதாரண மனிதனாகவும்
அதையும் அறியாதவனாக இருக்கிறான்.
அவனால் அவளை, அவளின் மனவெளியை கொஞ்சமும் தொடமுடியவில்லை.
அவனின் மனைவி இந்த சூழலில் இருந்து வெளியே வைத்திருப்பதிலிருந்து தெரிகிறது.
அவளிடம் தன் தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் அவளை வன்புணர்ச்சி
செய்த ஒருவனை தேடி அலைத்து வந்து அவளுடன் பேசவைக்கிறான். அந்த மனிதனைக் கண்டு அவள்
கொஞ்சமும் கலங்கவில்லை. அவன் டிபிக்கு மருந்துகள் கொடுத்து குணப்படுத்த உதவிச் செய்கிறாள்.
இவ்வளவும் இருநாட்களில் நடக்கிறது.
தன் படைப்புமனதைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட ரவியால் அவளை
புரிந்துக்கொள்ளமுடியவில்லை என்பது கன்யாகுமரி ஐதிகத்துடன் சரியாக பொருந்துகிறது. தானுமால்யனுக்காக காத்திருக்கும்
தேவியை நாம் பார்ப்பது அவளின் கன்னிமையை. ஆனால் தாய்மையும் கன்னிமையும் ஒன்று என்று
பிரவீனா ஒரு இடத்தில் சொல்கிறாள். ரவி விமாலாவிடம் எதிர்ப்பார்ப்பது அவளின் கன்னிமையை
அவளிடம் வெளிப்படுவது தாய்மை உணர்ச்சி.
அதை உணராத அவனின் படைப்புதிறனை இழந்துவிட்டதாக அறிந்த ஒரு
கணம் விருது பெறுவது லட்சியம் கொண்ட பிரவீணா அவனை பிரிந்து வேணுவுடன் படம் செய்ய சென்றுவிடுகிறாள்.
கன்யாகுமரியின் மிக நெருக்கமான கதை இதுவாக இருக்கும் என
நினைக்கிறேன். இதைதவிர வேறு இரு கதகள் இதில் சொல்லமுடியும். கன்யாகுமரி சினிமாவை பேசும் நாவலல்ல, சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையுடன் ஒப்பிடுவது
போன்ற தவறு வேறு இல்லை. கன்னிமை, தாய்மை, படைப்புசெயல், பரந்தமனம் ஆகியவற்றிருக்கு இருக்கும் ஒற்றுமையும்
அதற்குள் இருக்கும் தொடர்பை குறித்து பேசும் நாவல்.
No comments:
Post a Comment