இலங்கையின் இளங்குயில் என்னோடு இசைப்பாடுதோ என்று ஒரு பாடல்
80லில் பிரபல்யமாக இருந்தது. அந்த படத்தில் நடித்தவரும் ஒரு சிங்களப் பெண். படப்பிடிப்பு இலங்கையில்
நடந்துள்ளது. எழுபதுகளிலும்கூட பல படங்களில் ஒருவரை காட்டி இவர் இலங்கையில் (சிலோனில்) இருந்தவர், அங்கு வியாபாரம் செய்கிறார் என்று ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி
இப்படி சொல்வதாக இருக்கும். பாடல்களில் கொழும்பு, மட்டகளப்பு, இளநீர் என்ற வார்தையெல்லாம் இருக்கும். கமல் நடித்த புன்னகை மன்னனில்
சிங்கள நண்பர்கள் வருவார்கள். யுத்தம் வந்தபின் இலங்கை சம்பந்தமான எந்த விஷயமும் இடம்பெறுவதில்லை.
கவனமாக தவிர்க்கப்படுகிறது. அல்லது அரசியல் நிர்பந்தம் எதுவும் ஏற்படும் என்கிற பயமும்
இருக்கலாம்.
ஆனால் ஒரு மலையாளப் படம் இலங்கை மண்ணின் பின்னனியில் எடுக்கப்பட்டிருந்ததை
டிவியில் ஒளிப்பரப்பும்போது காணமுடிந்தது. மலையாள மக்கள் இலங்கையில் இணக்கமாக இருப்பதாக
தெரிகிறது. இலங்கை தமிழர்களில் 50% மலையாளிகள்தான்.
என்பதுகளின் ஆரம்பம் முதல் 2000 வரை
எந்த தமிழ் படத்திலும் இலங்கையின் பின்னனியும் அல்லது இலங்கை சம்பந்தமாக எதுவும் இல்லை
என்பதை காணலாம். தெனாலி, கண்ணத்தில்
முத்தமிட்டாள் போன்றவைகள் கொஞ்சம் சொல்லலாம் அதன்பின்னும் அதிகம் இல்லை. சிங்கம் படத்தில்
ஒரு சிங்களர் வருவதை தவிர பெரியதாக எதுவும் இல்லை.
இரண்டு எட்டு வைத்தால் இலங்கைக்கு சென்றவிட முடியும் போன்று
சின்ன தூரம்தான் இருக்கிறது. ஆனால் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே செய்தி ஊடகங்களிலும் சினிமா, இலக்கியம் போன்ற ஊடகங்களிலும் சரி மிகப்பெரிய
இடைவெளி இருப்பது போல இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மக்களை இலங்கை தமிழர்கள் விரும்பினாலும்
இங்கிருக்கும் அரசியல்வாதிகளை அவ்வளவாக விரும்புவதில்லை என்பதை அவர்களின் எழுத்துகளிலும்
பேச்சிலும் தெரியும்.
இலங்கை ஒரு சின்ன தீவுதான். அதுவும் தமிழர்கள் இருக்கும்
பகுதி அதிலும் சிறியது. அங்கிருக்கும் வேறுபாடுகள் பாகுபாடுகள் இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கும்
மக்களும் தெரிவதில்லை. அனைவரும் ஒரே எண்ணத்துடனும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதாக, இங்கிருக்கும் பல வேறுபாடுகளை பாகுபாடுகளை
போன்றதுதான் என்பதை மறந்து, நினைத்துக்
கொள்கிறார்கள்.
தமிழ் சினிமாக்கள் இலங்கையில் பிரபல்யம் மாதிரி இலங்கையின்
வானோலி ஒரு சமயம் பிரபல்யமாக இருந்தது. அதில் வந்த நிகழ்ச்சிகளை தமிழக்த்தின் அனைத்து
பகுதிகளிலும் கேட்டு மகிழ்ந்தார்கள். அங்கிருந்த பேச்சுவழக்குகளும் சொற்களும்கூட தெரிந்திருந்தது.
ஆனால் இன்று அப்படியில்லை. மிக முக்கியமான சில நிகழ்வுகளைத்தவிர் அரசியல், பண்பாட்டு பிரச்சனைகளைப் பற்றிய நம் அரிதல்
மிககுறைவு.
இலங்கை தமிழர்களுக்கும் சிங்களர்களும் எப்போது இணக்கம் இருந்ததில்லை.
அதன் தொடர்ச்சியாக சிங்களர்களுக்கும் இந்திய தமிழர்களுக்கும் இணக்கம் ஏற்படுவதேஇல்லை.
மலையாள ஊடங்களும் சினிமாவும் தொடர்ந்து இணக்கமாகவே இருக்கிறது. போததற்கும் மீனவர்கள்
பிரச்சனையும் இரு மக்களிடையே மேலும் பூசலை ஏற்படுத்துவதில் முக்கியமாக இருக்கிறது.
உலகம் முழுவதும் நாடுகளிடையே மீனவர்கள் சண்டைகள் தொடர்கின்றன, இந்திய இலங்கை மீனவர் சண்டைகள் மிகப்பெரிய வன்முறையின் தொடர்ச்சியாக
பார்க்கப்படுகிறது.
இப்போதைய இலங்கைப் பற்றிய சினிமா அல்லது டாக்குமெண்டரி ஏன்
தமிழில் வருவதில்லை? சிங்கபூர், மலேசியா, துபாய் போன்ற மற்ற நாடுகளின் இருப்பவர்களைப்
பற்றி பேசும் ஊடகங்கள் இலங்கையை மட்டும் தவிர்ப்பது ஏன்? பல நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் வெளிநாட்டுபயணிகள்போல் இந்திய/தமிழ்
நாட்டிலிருந்து இலங்கைக்கு செல்லும் மக்களின் குறிப்புகள் எதுவும் காணக்கிடைப்பதில்லை. மீண்டும் அதே அரசியல் காரணங்கள்
இருக்கலாம். அங்கிருக்கும் அரசியல் நிர்பந்தங்களை விட இங்கிருக்கும் நிர்பந்தங்கள்
அதிகம் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறலாம். மீண்டும் இளங்குயிலை
காண இன்னும் நிறைய ஆண்டுகள் ஆகலாம்.
No comments:
Post a Comment