குடும்ப பெண்கள் என்பது தான் மாதிரி குடும்பபெண் எழுத்தாளார்களும். அவர்களின் எழுத்துக்களில் குடும்பமும் குடும்ப பிர்ச்சனைகளும் குறிப்பாக குடும்பத்தை தாண்டி இருக்கும் மற்றயவைகளெல்லாம் தீயவை என்ற பொருளிலும் இருக்கும். குடும்ப பிர்ச்சனைகளை எவ்வளவுதான் சொல்லிவிடமுடியும். 20வயது பெண்ணின் ரொமாஸ்சிலிருந்து 60 பெண்களின் மாமியார் மருமகள், நாத்தனார், கொழுந்தியாள் என்று பிர்ச்சனைகளும் அதன் ரூபங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
முன்பு லக்ஷ்மி, இந்துமதி, சிவசங்கிரிக்கு பின் நடுவில் ரமணி சந்திரன் வந்து அதற்குப்பின் இப்போது பெரியளவில் பெண் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மார்க்கெட் இருப்பதும் தொடர்ந்து இன்றைய டிவி உலகத்திலும் அவர்கள் எழுத்துக்கள் வாசிக்கப்படுகின்றன.
ரமணி சந்திரனின் கதைகள் பொதுவாக இருவது வயதுபெண்ணின் கதையாக இருக்கும். அவள் யாரையாவது காதலிப்பதும், அவளின் ஆசைகள், நோக்கங்கள் என்று எளிய சின்ன சித்திரங்களாகவே இருக்கும். அவள் காதலிக்கும் நபர் அவள் அருகில் அமர்ந்ததும் காற்று லேசாக அடித்து அவள் கூத்தலை அலைகழிக்கும். மழைத்தூறகள் அவள் மேல் அடிக்கும். ஆனால் காதலனை அவளை பயன்படுத்தி/பயன்படுத்தாமல் விட்டு சென்றுவிடுவான். அவன் வேலை சேர்ந்த இடத்திலோ அல்லது அவன் குடியிருக்கும் இடத்திலோ சென்று அவளும் சேர்ந்து கொள்வாள். கொஞ்ச நாளில் அவன் அவளை புரிந்துக் கொள்வான். தான் இத்தனை நாள் முக்கியமான ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டதாக உணர்வான். வருத்தப்படுவான் பின் அவளை திருமணம் செய்து கொள்வான். இதுதான் எல்லா கதைகளிலும் இருக்கும் ஒன்லைன். மாறி மாறி வேறுவேறு சூழல் என்று வரும்.
சீரியல்களை பார்க்கும் நபர்களை அவர்களுக்கு பிடித்த சீரியல்களை பார்க்கும்போது அவர்களின் முகபாவனையை கவனிக்கவேண்டும். அப்படி ஒரு தீவிரத்தன்மையை அவர்கள் சாதாரணமாக இருக்கும்போது காணமுடியாது. அப்போது அவர்களுக்கு நேரும் இடையூறுகளை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்று புரிந்துவிடும். போன் வந்தால் எடுக்க மாட்டார்கள். குழந்தைகள் சினுங்கினால் அத்தனை வன்மமும் முகத்தில் தெறிக்க சும்மா இரு என்பார்கள். விருந்தினர்களை கவனிக்க மாட்டார்கள். அவர் எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் வெறுக்கத்தான் செய்வார்கள்.
அவர்களிடம் இந்த சீரியல்கள் ஏன் பிடிக்கின்றன எல்லாமே ஒன்னுபோலதானே இருக்கு என்றால், ஒன்னுபோல இருந்தாலும் வேவ்வெறு சீரியல்களில் வேறுமனிதர்கள் சூழல்கள் பெயர்கள் என்றும் அவர்களின் நடிப்பும் மாறுபடுவதால் அது புதிதாக இருக்கிறது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்தாலும் சுவாரஸ்யம் இருப்பதை ஒத்துக்கொள்ளவேண்டும் என்பார்கள்.
இதேதான் இன்றைய குடும்ப நாவல்களின் நிலை. இப்போது புதிதாக எழுதும் பெண் எழுத்தாளர்கள். முத்துலட்சுமி ராகவன், லட்சுமி பிரபா, விஜி பிரபு, மேகலா சித்ரவேல், காஞ்சனா ஜெயதிலகர் என்று ஒரு சின்ன லிஸ்ட் ஒரு பத்திரிக்கையில் வெளியாகி இருந்தது. இவர்களின் எனக்கு முத்துலட்சுமியும், லட்சுமி பிரபாவும்தான் தெரியும் அவர்கள் எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள் புத்தக சந்தையிலும், காட்சியிலும் காணமுடிகிறது. மற்ற பெயர்களை கவனித்திருக்கலாம் ஆனால் நினைவிலில்லை. ஆனால் அனைவரும் 50க்கு மேற்பட்ட நாவல்களை எழுதி அது பல பதிப்புகளை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.
மேலே சொன்ன சீரியல்கள்தான் இங்கும். ஒரே விஷயம்தான் என்றாலும் புதிதாக இருக்க அவைகள் புதிய சூழலிலும் புதிய மாதிரியாக எழுதப்படுகின்றன. இந்த எழுத்துகளையும் எழுதுபவர்களையும் குறைத்து மதிப்பிடமுடியாது. வேவ்வேறு வகையாக வாசகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும். புதியதாக வரும் வாசகர்களுக்கு தேவையான புதிய அவர்கள் அறிந்த/பார்த்த விஷயங்களைப் பற்றி தெரிந்து அவைகளை கொடுக்க வேண்டும். அதை ஒரு கலையாக செய்யும் வரை வெற்றிப் பெற்றுக்கொண்டேயிருக்கலாம்.
No comments:
Post a Comment