விளையாடிக் கொண்டிருந்தவன் திடீரென ஓடிவந்து இந்த முட்டி
ஒடிஞ்சி போயிடுச்சுப்பா என்றான். பதறிப் போய்விட்டேன். எங்கே என்ன ஆச்சு என்றேன். காட்டிய
அவன் வலது முட்டி நன்றாகத்தான் இருந்தது. ஓடும்போது வலிக்குதுபா ஒடஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன் என்றான். அது அப்படிதான் என சொல்லி, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு போ சரியாகிவிடும் என்று சமாதானப்படுத்த
வேண்டியிருந்தது. மற்றொருநாள் அப்பா இந்த ஹார்ட் கலண்டி வர்றமாதிரி
இருக்குபா ஒடவே முடியல என்றான். சிரிப்பு தாளமுடியவில்லை. கேட்டுப்பாருப்பா எப்படி
அடிக்குதுன்னு என்றான். என் இதயதுடிப்பை ஒருமுறை அவனுக்கு கேட்கவைத்ததின் விளைவு. ஓடும்போது
ஏற்படும் மூச்சுவாங்களை அப்படி சொல்கிறான். தொடர்ந்து ஓடாமல் கொஞ்சம் இளைபாறிச் செல்லவேண்டும் என அறிவுறுத்தினேன்.
ஆனால் நாளெல்லாம் சிரிப்பாக இருந்தது. சிரிப்போடு நான் கிண்டல் அடித்தாலும், அவனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அறியாமையோடு
அதற்கு பதிலளிக்க முடிந்தது. ஆம் குழந்தை அறியாமையில் இருக்கும்போது நமக்கு நமக்கு அளவில்லா
ஆனந்தமும் ஏற்படுகிறது. குழந்தைகளைக் கொஞ்ச அது ஒரு காரணமாகவும் இருக்கிறது.
Showing posts with label sex. Show all posts
Showing posts with label sex. Show all posts
Tuesday, December 22, 2015
Tuesday, January 13, 2015
இன்றைய காமம்
நான் பள்ளியில் படித்தபோது சகபெண் பிள்ளையை கிண்டல் அடித்தார்கள் என்பதற்காக
அந்த பெண்ணின் மாமா எங்கள் வகுப்பறைக்கு வந்து அந்த இரண்டு சிறுவர்களையும் ரத்தம்வர அடித்து நொறுக்கி மிரட்டிவிட்டு
சென்றார். அந்த நேரம் மதிய உணவு இடைவெளி நேரம். ஆகவே அவர் வந்தது யாருக்கும் தெரியவில்லை.
தெரிந்தபின் பள்ளியில் ஆசிரியர்களிடையே
பெரிய விவாதமாக ஆகிவிட்டது. எப்படி ஒருவர் உள்ளே வந்து அடிக்கலாம் என்று. அந்த சிறுவர்கள்
வறிய ஏழ்மை குடும்பத்திலிருந்து
வந்தவர்கள் என்பதால் பெரிய பிரச்சனையாக ஆகாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அப்போது நாங்கள்
படித்துக்கொண்டிருந்தது நான்காம் வகுப்பு.
Subscribe to:
Posts (Atom)

