மெகா சீரியல் எனப்படும் நெடுந்தொடர்களில் வரும் கதாபாத்திரங்களும்
காட்சிகளும் நிஜவாழ்க்கையின் பிரதிபலிப்புகள்தான் அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஒரு தினத்தின் முக்கால்வாசி நேரங்களில்
ஒளிப்பரப்பாகும் தொடர்களில் உள்ள காட்சிகளையும், கருத்துக்களையும், அவர்களின் பார்வைகளையும் ஒரு சேர புரிந்து கொண்டு எந்த குழப்பங்களும், குமட்டலும், வயிற்று பொருமலும், வயிற்று போக்கும் ஏற்படாமல் சஞ்சீவி லேகியம்
தின்ற கணக்காக அமர்ந்து அடுத்த நாள் தொடர்களை பார்க்கும் மக்களை வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை. வெவ்வேறு நேரங்களில் ஒளிப்பரப்பாகும்
தொடர்கள் ஒரே டெம்ளேட்டைக்கொண்டு ஒரேவகையான பாத்திரங்கள், ஒரேமாதிரியான நடிகர்கள் என்று இருப்பதை
ஏன் என்ற கேள்வி கேட்காமல் பார்த்துவிடுகிறார்கள்.
எல்லா டிவி சேனலைகளை சேர்த்து கிட்டத்தட்ட 20 மெகா சீரியல்கள் வரை ஓளிபரப்படலாம் என
தெரிகிறது. நிஜமாக மக்கள்
இந்த சீரியல்களை முழுமையாக
உள்வாங்கி கொள்கிறார்களா தெரியவில்லை. ஏனெனில் சாப்பிட மறந்து, தூங்க மறந்து, உறவுகளுடன் பேச மறந்து, வெளியே செல்லும் நடை பழக்கம் மறந்து இவர்கள்
காணும் இந்த மெகா சீரியல்கள் எந்தவித அடிப்படை அலகுகள் இல்லாமல் வெறும் அன்றன்றைய விசயங்களை
தீவிரமாக பேசி வருபவை. மக்களை
ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த சீரியல்கள் எந்த ஒரு தரமான, நேர்மையான பார்வையையோ, கருத்தையோ வலியுறுத்தி எடுக்கப்பட்டவைகள்
இல்லை என்பதை அவனைவரும் புரிந்தே இருக்கிறார்கள்.