அன்புள்ள அசோக்குமார்
வணக்கம். முதல் பகுதி கதையை முழுதாகப் படித்தேன். நல்ல தொடக்கம். அவன் மனநிலை, அவன் தாயின் மனநிலை, அவன் மனைவியின் மனநிலை எல்லாமே தனித்துவத்துடன் அமைந்துள்ளன. அவனுடைய விசித்திரமான நடத்தைகளை சிறிதும் மிகை படியாத விதத்தில் எழுதியருக்கிறீர்கள். மகிழ்ச்சி.
இரண்டாம் பகுதிக் கதையையும் படித்து முடித்தேன். மனத்தை பனி இறுகிய காடாக உருவகித்து, அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து தெளிவடைவதை கூர்மையாக சொல்லியிருக்கிறீர்கள். பழைய நினைவுகளை சின்னச்சின்ன சித்திரங்களாக இடையிடையே ஊடாடவிட்டு அழகாக கோர்த்திருக்கிறீர்கள். பொதுவாக தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்படும் சிறுவர்களின் மனநிலை அடையும் மாற்றங்கள் துல்லியமாக அமைந்துள்ளன. அப்பாவுவின் அணுகுமுறை, அவன் இறந்தகால வாழ்வின் தகவல்கள் எல்லாமே கதைமையத்துக்கு வலு சேர்க்கின்றன. முள்ளும் குப்பைகளுமாக அடர்ந்த இடம் சிறுகச்சிறுக சுத்தம் பெற்று தெய்வத்தைக் கண்டடையும் இடம் மொத்த கதையின் மைய்த்தையும் உருவகமாக முன்வைப்பதாக உள்ளது. கதை வாசிப்பு நல்ல அனுபவமாக இருந்தது. வாழ்த்துகள்
அன்புடன்
பாவண்ணன்
No comments:
Post a Comment