Sunday, September 20, 2015

நாய்கள்

சிறுவர்களுக்கு பொதுவாக நாய்களை பிடிக்காது, நாய்களுக்கு சிறுவர்களை அதிகம் பிடிக்கும் என்பதை கவனித்திருக்கிறேன்., எளிதாக அவர்களிடமிருந்து தங்களுக்கு தேவையான உணவுகளைப் பிடுங்கிவிடமுடியும் என்பது ஒரு காரணம். தனியாக சிறுவர்கள் எதையாவது கடையிலிருந்து வாங்கிவரும் போது அவர்களை வழியில் மடக்கி முகர்ந்து பார்க்க பயந்து போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள், அதனால் நாய்களுக்கு எளிதாக தின்ன எதுவும் கிடைத்துவிடுகின்றன. பெரிய நபர்களைவிட சின்ன சிறுவர்களை எளிதாக விரட்ட முடியும் நாய்களால்.
 
நான் சிறுவனாக இருந்தபோது என் மாமாவீட்டிற்கு தனியாக செல்ல அங்கு இருந்த அவர்கள் வீட்டு நாய் அன்னியன் என என் மேலே பாய்ந்துவிட்டது. கடிக்க வில்லை, அதுவே நாய்கள் மீது எனக்கு சிறுவயதுமுதல் வெறுப்புவர காரணமாக இருந்துவிட்டது. நாய்களை வைத்திருக்கும் மனிதர்களை, அவர்கள் வெளியே அவைகளை நடத்திச் செல்வதை பலசமயம் கண்டு வெறுப்புடன் நண்பர்களாக அவர்களுடன் பேசாமல் சென்றிருக்கிறேன்.


ஆனால் நாய்கள் மனிதர்களுக்கு முக்கியமான நண்பன். நாய்களை வைத்து வெடிகுண்டு, குற்றம் செய்த மனிதர்கள் என்று பலவைகளை அவைகளுக்கு பயற்சி அளித்து கண்டுபிடித்துவிடமுடியும். வீட்டிற்கு காவலாளியாக, பெண்களுக்கு பாதுகாப்பாக, குருடர்களுக்கு துணையாக என்று எத்தனையோ வகைகளில் பயன்படுகிறது. கோழி, ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளும் நமக்கு பயன்பட்டாலும், ஒரு பெட் விலங்காகவும் பயன்பாட்டு விலங்காகாவும் பயன்படும் ஒரு உயிரினம் நாய்தான்.

நாய்களைப்போன்று மனிதர்களோடு நட்பாக பழுகும் வேறு ஒரு விலங்கு இல்லை எனலாம். ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதரைவிட நாய்கள் சிறந்த நட்பாக் இருக்க முடிகிறது. ஆதி காலத்தில் இவன் பின்னால் சென்றால் நமக்கு உணவு எதாவது கிடைக்கும் என்று மனிதர்களை பின் தொடர பழகிக் கொண்டன. அதுவே தொடர்ந்து அவைகளுக்கு பழக்கமாக இன்றளவும் இருக்கிறது.

நாய்கள் மனிதர்களை எப்போது தாக்க நினைப்பதில்லை. மிக நட்பாகவே இருக்க விரும்புகின்றன. அவற்றின் இயல்பிற்குமாறாக தாக்குவது கடிக்க வருவது மனிதனின் இயல்பை பிரதிபதிப்பதுதான். சிறுவயதிலிருந்து அவற்றிற்கு தாக்க/கடிக்க அதன் உரிமையாளர் கற்று கொடுக்கிறார்கள். அப்படி கடிக்காத அல்லது மற்ற மனிதனை பயமுறுத்த போகாத நாய்கள் அவர்களிடம் இருக்க முடியாது.

நாய் வைத்திருக்கும் மனிதனின் ஆணவம் என்பது சகமனிதர்களின் மேல் இருக்கும் வன்மமும் வெறுப்பும் சேர்ந்த ஒன்றுதான். அவர்களால் நாய் இல்லாமல் வெளியே செல்லவோ தன் வாழ்வை அமைதியாக வாழவோ முடிந்ததில்லை. என் வீட்டு அருகில் ஒருவர் அந்த தெருவில் இருக்கும் நாய்கள் அனைத்திற்கு நண்பனாக இருப்பார். எப்போதும் அவரைச் சுற்றி சில நாய்கள் இருந்துக் கொண்டே யிருக்கும். கடைக்கு சென்றால் பின்னால் வந்து அவரிடம் பொறைகளை வாங்கி தின்னும். ஆனால் அவரின் வீட்டிற்குள் அவைகள் நுழைய முடியாது.

இந்த மாதிரியான மனிதர்கள் சக மனிதனிடம் காட்டும் அன்பைத்தான் நாய்களிடமும் காட்டுகிறார்கள் அல்லது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையாலும் அப்படி இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் வீட்டிற்குள் இருக்கும் மூடிய கேட் கதவுகளுக்குள் இருக்கும் உயரமான, தடிமனான, உயர்ந்தவகை நாய்களை வைத்திருக்கும் மனிதர்களின் அகம் முழுவதும் சகமனிதர்கள் மீது வன்மம் நிறைந்திருப்பதாகவே நினைக்கிறேன்.

அவர்கள் அருகில் இருக்கும் மனிதர்களிடம் சகஜமாக பேசுவதைக்கூட தனக்கு இழுக்கானது என்பதுபோல் தான் நடந்துக் கொள்வார்கள். மிகத்தனிமையில் அந்த நாய்களுடன் மட்டுமே இருப்பார்கள். அவர்களின் தனிவாழ்வில் பல தோல்விகளும் சங்கடங்களை சந்தித்தவர்களாக இருப்பதை கவனித்திருக்கிறேன். அது ஒரு சின்ன காரணம்தான் என்றாலும் இயல்பிலேயே வெறுப்பை வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

தெருநாய்களைப் போல் சுதந்திரமாக திரியமுடியாத கோபமும், இனப்பெருக்கதிற்கு தேவையான உடலின்பமும் கிடைக்காத கோபமும் சேர்ந்து தன் முதலாளியை தவிர மற்ற மனிதர்களைமேல் ஒரு தாக்குதலாகவே தொடுக்கிறது. சில சமயங்களின் தன் வீட்டு மனிதர்களையும் தாக்கி கொலைசெய்வதையும் பத்திரிக்கைமூலம் கேள்விப்படமுடியும் அதற்கு காரணமும் மேற்ச் சொன்னவைகள் தான்.

நாய்கள் மனிதனுக்கு மிக நல்ல நண்பன். ஆனால் நாய்களை அதன் விலங்கியல்பில் வளர்க்கப்படாதவைகள் எந்த நல்ல விஷயமும் அவைகளும் நாம் செய்துவிடமுடியாது. இம்மாதிரி வளர்க்கப்படுவதால் சகமனித வெறுப்பைதவிர வேறு எதும் நாமும் பெறமுடியாது.

No comments: