டாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு. என். செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின் கொண்டு அலசி ஒரு பட்டியலிட்டிருக்கிறார். அது திண்ணையில் வெளியாகியிருந்தது. அவற்றில் இருந்த சில முக்கிய விஷயங்களை தொகுத்து இங்கு மீண்டும் வெளியிடுகிறேன். மேலும் விவரங்களுக்கு enselvaraju@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது
என்.
செல்வராஜ்
முதல் நாவல் பிரதாப
முதலியார் சரித்திரம் 1879 ல் வெளியாகியது. 135 ஆண்டு கால நாவல் வரலாற்றில் பல்லாயிரக்கணக்கில் நாவல்கள் வந்துள்ளன. இதுவரை
வெளிவந்த நாவல்களில் சிறந்த 150 நாவல்களைக் கண்டறிய நான் எடுத்துக் கொண்ட
முயற்சியே தலை சிறந்த நாவல்கள் ஒரு பார்வை, சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்-1 , சிறந்த
நாவல்கள் ஒரு பட்டியல்-2 ஆகிய மூன்று கட்டுரைகளாக வந்தன. இவை திண்ணை இணைய இதழில் வெளிவந்தன.
இந்த மூன்று கட்டுரைகளின் முடிவை இதில் காண்போம். டாப் 10 பரிந்துரைகள், எனது தலை சிறந்த நாவல்கள் கட்டுரையில் உள்ளது. நாவல் பரிந்துரைப் பட்டியல், சிறந்த நாவல்கள் பட்டியல்-1
மற்றும் 2 ல் உள்ளவை. இவற்றையே பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறேன்.
நாவல் — ஆசிரியர்– பரிந்துரைகள்
1.
மோகமுள்- தி.ஜானகிராமன் – (டாப் 10 பரிந்துரைகள்-20, பட்டியலுக்கான பரிந்துரைகள் - 21)
2.
ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி– (டாப் 10 பரிந்துரைகள் -15, பட்டியலுக்கான பரிந்துரைகள் -20)
3.
ஜே ஜே சில குறிப்புகள்
– சுந்தர
ராமசாமி- (டாப் 10 பரிந்துரைகள்- 12, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21)
4.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்-(டாப் 10 பரிந்துரைகள்-12, பட்டியலுக்கான பரிந்துரைகள்-16)
5.
கடல்புரத்தில் – வண்ணநிலவன்— (டாப் 10 பரிந்துரைகள்-10, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15)
6.
புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்– (டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )
7.
கோபல்ல கிராமம் – கி ராஜநாராயணன்—-(டாப் 10 பரிந்துரைகள்-9, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )
8.
நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்– (டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -19 )
9.
பொய்த்தேவு – க நா சுப்ரமணியம் –(டாப் 10 பரிந்துரைகள்- 8, பட்டியலுக்கான பரிந்துரைகள் -15 )
10.
தலைமுறைகள் – நீலபத்மநாபன்– (டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -21 )
11.
விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -(டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -17 )
12.
பொன்னியின் செல்வன் – கல்கி- (டாப் 10 பரிந்துரைகள்- 7, பட்டியலுக்கான பரிந்துரைகள் -11 )
13.
18 வது அட்சக்கோடு – அசோகமித்திரன் – (டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )
14.
சாயாவனம் – சா. கந்தசாமி– (டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )
15.
பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன்– (டாப் 10 பரிந்துரைகள்- 6, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )
16.
கோவேறு கழுதைகள் – இமையம்- (டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -13 )
17.
அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்–(டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )
18.
நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்–(டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )
19.
நினைவுப்பாதை – நகுலன்– (டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )
20.
கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்–(டாப் 10 பரிந்துரைகள்- 5, பட்டியலுக்கான பரிந்துரைகள் -8 )
21.
புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்– (டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -18 )
22.
ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குரூஸ் — (டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -14 )
23.
வெக்கை – பூமணி —— (டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -12 )
24.
கிருஷ்ணப்பருந்து – ஆ.மாதவன் —(டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -10 )
25.
வானம் வசப்படும் – பிரபஞ்சன்–(டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )
26.
வாசவேஸ்வரம் – கிருத்திகா–(டாப் 10 பரிந்துரைகள்- 4, பட்டியலுக்கான பரிந்துரைகள் -9 )
27.
வாடிவாசல்- சி சு செல்லப்பா (டாப் 10 பரிந்துரைகள் – 3, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள் – 14,)
28.
குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி (டாப் 10 பரிந்துரைகள் – 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 13,)
29.
சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்
(டாப் 10 பரிந்துரைகள் – 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் – 12)
30.
பிறகு – பூமணி (டாப் 10 பரிந்துரைகள்- 3, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்- 12)
31.
பின் தொடரும் நிழலின் குரல்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் - 3, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்- 11)
32.
மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் (டாப் 10 பரிந்துரைகள் - 3, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்- 11)
33.
நெடுங்குருதி – எஸ் ராமகிருஷ்ணன் (டாப் 10 பரிந்துரைகள் - 3, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்- 10 )
34.
சோளகர் தொட்டி – ச பாலமுருகன் (டாப் 10 பரிந்துரைகள் - 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்- 7)
35.
காவல் கோட்டம் – சு வெங்கடேசன் (டாப் 10 பரிந்துரைகள்- 3 , பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்-6 )
36.
ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் – தமிழவன் (டாப் 10 பரிந்துரைகள்- 3 , பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்-6),
37.
உயிர்த்தேன் – தி ஜானகிராமன் (டாப் 10 பரிந்துரைகள்- 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்-5)
38.
வேள்வித்தீ – எம் வி வெங்கட் ராம் (டாப் 10 பரிந்துரைகள்- 3 , பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்- 5)
39.
அவன் ஆனது – சா கந்தசாமி (டாப் 10 பரிந்துரைகள் - 3, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்
- 4)
40.
சித்திரப் பாவை — அகிலன் (டாப் 10 பரிந்துரைகள்- 3, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்- 3)
41.
எட்டு திக்கும் மத யானை –
நாஞ்சில் நாடன் (டாப் 10 பரிந்துரைகள் - 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:12,)
42.
ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில்
முகம்மது மீரான் (டாப் 10 பரிந்துரைகள் - 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்:-12 )
43.
கோபல்லபுரத்து மக்கள்- கி. ராஜநாராயணன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்:11)
44.
பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்:10)
45.
ரப்பர்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள் - 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:10)
46.
கமலாம்பாள் சரித்திரம் –
ராஜம் அய்யர் (டாப்
10 பரிந்துரைகள்- 2,
பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 9)
47.
என் பெயர் ராமசேஷன்- ஆதவன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 9)
48.
ஏழாம் உலகம்- ஜெயமோகன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 9 )
49.
அசடு – காஷ்யபன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
50.
இடைவெளி- சம்பத் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
51.
காகித மலர்கள்- ஆதவன் (டாப் 10 பரிந்துரைகள் - 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
52.
தண்ணீர் – அசோகமித்திரன் (டாப் 10 பரிந்துரைகள் - 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
53.
நல்ல நிலம் – பாவை சந்திரன் (டாப் 10 பரிந்துரைகள் - 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8,)
54.
ரத்த உறவு – யூமா வாசுகி (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8)
55.
அஞ்சலை – கண்மணி குணசேகரன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 7)
56.
சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:
7)
57.
நித்ய கன்னி- எம். வி வெங்கட்ராம் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 7)
58.
பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம்
வேதநாயகம் பிள்ளை (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)
59.
கூகை – சோ. தர்மன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 6)
60.
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் – ஜெயகாந்தன்
(டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
61.
சிவகாமியின் சபதம் – கல்கி (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
62.
குறிஞ்சி மலர் – நா பார்த்தசாரதி (டாப் 10 பரிந்துரைகள்- 2 , பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 5)
63.
கொற்றவை- ஜெயமோகன் (டாப் 10
பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
64.
மணல்கடிகை- எம்.கோபாலகிருஷ்ணன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5 )
65.
தியாகபூமி – கல்கி (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 4)
66.
பாலும் பாவையும் – விந்தன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்:3)
67.
யவனராணி – சாண்டில்யன் (டாப் 10 பரிந்துரைகள்- 2, பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:
3)
68.
சிலுவைராஜ் சரித்திரம்- ராஜ் கௌதமன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 13)
69.
யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்
(பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 13)
70.
அபிதா- லா சா ராமாமிர்தம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 13)
71.
கருக்கு – பாமா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்:
13)
72.
புலிநகக் கொன்றை – பி ஏ கிருஷ்ணன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 12,)
73.
காடு– ஜெயமோகன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 11,)
74.
கம்பா நதி – வண்ணநிலவன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10)
75.
கூளமாதாரி – பெருமாள் முருகன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 10)
76.
தந்திரபூமி – இந்திரா பார்த்தசாரதி (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 10)
77.
தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில்
நாடன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 10)
78.
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 10)
79.
ஒரு நாள் – க நா சுப்ரமணியம் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 9)
80.
கடலுக்கு அப்பால்-
ப சிங்காரம் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 9,)
81.
கொரில்லா- ஷோபா சக்தி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 9)
82.
மரப்பசு – தி ஜானகிராமன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 9)
83.
உப பாண்டவம்- எஸ்.ராமகிருஷ்ணன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்:8,)
84.
குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன்
சந்திரசேகர் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8)
85.
சதுரங்க குதிரை- நாஞ்சில் நாடன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
86.
மலரும் சருகும் – டி செல்வராஜ் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
87.
இரண்டாம் ஜாமங்களின் கதை- சல்மா (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
88.
நாய்கள்- நகுலன்
(பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 8)
89.
நிழல் முற்றம் – பெருமாள் முருகன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8 )
90.
பழையன கழிதலும் – சிவகாமி (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
91.
செடல் – இமையம் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
92.
செம்பருத்தி- தி ஜானகிராமன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 8)
93.
குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர
ராமசாமி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7
)
94.
தாகம்—-கு சின்னப்ப பாரதி (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 7)
95.
மண்ணாசை- சங்கரராம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7)
96.
மாமிசப் படைப்பு — நாஞ்சில் நாடன் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 7)
97.
தரையில் இறங்கும் விமானங்கள்– இந்துமதி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7)
98.
சட்டி சுட்டது – ஆர் ஷண்முகசுந்தரம் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 7,)
99.
சொல் என்றொரு சொல் — பிரேம் ரமேஷ் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 7)
100. ஏறுவெயில் – பெருமாள் முருகன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7)
101. வாக்குமூலம்—நகுலன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 7,)
102. என்பிலதனை வெயில் காயும் – நாஞ்சில் நாடன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
103. எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி
பனியனும்- – சாரு நிவேதிதா (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 6)
104. ஒற்றன்- அசோகமித்திரன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
105. கரமுண்டார் வீடு- தஞ்சை பிரகாஷ் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
106. கரிசல் – பொன்னீலன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
107. கூனன் தோப்பு–தோப்பில் முகம்மது மீரான் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
108. தகப்பன் கொடி- அழகிய பெரியவன்
(பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
109. புதிய தரிசனங்கள் – பொன்னீலன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
110. மானசரோவர்- அசோகமித்திரன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
111. ம் – ஷோபா சக்தி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
112. யாரும் யாருடனும் இல்லை- உமா
மகேஸ்வரி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
113. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும்
சிலருடன்- எம் ஜி சுரேஷ் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
114. அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை
தேநீரும்- எம் ஜி சுரேஷ் (பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 6)
115. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
116. ஆனந்தாயி – ப சிவகாமி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
117. ஜீவனாம்சம்- சி சு செல்லப்பா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
118. கள்ளம்- தஞ்சை பிரகாஷ் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
119. குறிஞ்சித் தேன்- ராஜம் கிருஷ்ணன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
120. தேநீர்- டி செல்வராஜ் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
121. தொலைந்து போனவர்கள்- சா கந்தசாமி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
122. பத்மாவதி சரித்திரம்- அ.
மாதவைய்யா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
123. புணலும் மணலும்- ஆ மாதவன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6,)
124. ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
125. ராஸலீலா- சாருநிவேதிதா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
126. ரெயினீஷ் அய்யர் தெரு – வண்ணநிலவன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
127. வாடாமல்லி- சு சமுத்திரம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 6)
128. அலைஓசை – கல்கி (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,)
129. பகடையாட்டம்- யுவன் சந்திரசேகர் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
130. புத்ர – லா சா ராமாமிர்தம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
131. மெர்க்குரிப்பூக்கள் – பாலகுமாரன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
132. ஆறுமுகம்- இமையம் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
133. கல்லுக்குள் ஈரம்- ர சு நல்லபெருமாள்
(பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
134. கள்ளி – வா மு கோமு (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
135. கவலை- அழகிய பெரிய நாயகி அம்மாள்(பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
136. கனவுச் சிறை – தேவகாந்தன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
137. சங்கதி – பாமா (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5,)
138. சாயத்திரை- சுப்ர பாரதி
மணியன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
139. துறைமுகம்- தோப்பில் முகம்மது மீரான்(பட்டியலில் பரிந்துரைத்தவர்கள் 5 )
140. நிழல்கள் – நகுலன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
141. பஞ்சும் பசியும் – தொ மு சி ரகுநாதன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
142. பாய்மரக்கப்பல் – பாவண்ணன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
143. மிதவை- நாஞ்சில் நாடன் (பட்டியலில் பரிந்துரைத்தவர்கள்: 5)
144. இதயநாதம்- சிதம்பர சுப்ரமணியம்
145. பட்டியலில்
பரிந்துரைத்தவர்கள்: 4, க நா சுப்ரமணியம்(டாப் 10), ஜெயமோகன், சி மோகன், நாஞ்சில் நாடன்
146. இரும்பு குதிரைகள் — பாலகுமாரன்
147. கன்னி – ஜெ பிரான்சிஸ் கிருபா
148. சுதந்திரபூமி — இந்திரா பார்த்தசாரதி
149. தில்லானா மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு
150. தூர்வை – சோ தர்மன்
151. மலர் மஞ்சம் – தி ஜானகிராமன்
இந்த 143 நாவல்களில் 26 நாவல்கள் தலைசிறந்த நாவல்கள், 117 நாவல்கள் சிறந்த நாவல்கள் ஆகும். 5 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த பட்டியலை 150 நாவல்கள் என்ற அளவில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் மேலும் 7 நாவல்களை(4 பரிந்துரைகள் பெற்ற நாவல்கள்) பட்டியலில் சேர்க்கலாம். அவை எவை எனப் பார்ப்போம்.
இந்த பட்டியல் பல்வேறு எழுத்தாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் நிரந்திரமானது அல்ல. மாற்றத்துக்குரியது. புதிய பரிந்துரைகள் மேலும் கிடைக்கும்போது பட்டியலில் மாற்றம் ஏற்படும். இந்த ஆய்வில் கிடைத்த மற்ற முடிவுகளை இப்போது பார்க்கலாம்.
இந்த 150 நாவல்களில் முக்கிய எழுத்தாளர்களின் பரிந்துரைகள்
1.
அசோகமித்திரன் பரிந்துரைத்த 23 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
2.
அய்யனார் விஸ்வநாத் பரிந்துரைத்த 60 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
3.
பாலகுமாரன் பரிந்துரைத்த
37 நாவல்கள்
இடம் பிடித்துள்ளன
4.
இரா முருகன் பரிந்துரைத்த 47 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
5.
சி மோகன் பரிந்துரைத்த 38 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
6.
ஜெயமோகன் பரிந்துரைத்த 133 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
7.
எஸ் ராமகிருஷ்ணன்
பரிந்துரைத்த 81 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
8.
ஆர் வி பரிந்துரைத்த 56 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
9.
நாஞ்சில் நாடன்
பரிந்துரைத்த 114 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
10.
ந முருகேச பாண்டியன் பரிந்துரைத்த 54 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
11.
வெங்கட் சாமினாதன்
பரிந்துரைத்த 42 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
12.
கோவை ஞானி பரிந்துரைத்த 43 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
13.
க பூரணசந்திரன்
பரிந்துரைத்த 47 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
14.
க நா சுப்ரமணியம் பரிந்துரைத்த 53 நாவல்கள்
இடம் பிடித்துள்ளன
15.
எம் வேதசகாயகுமார் பரிந்துரைத்த 31 நாவல்கள்
இடம் பிடித்துள்ளன
16.
பா ராகவன் பரிந்துரைத்த 27 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
17.
சுந்தர ராமசாமி
பரிந்துரைத்த 35 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
18.
விக்ரமாதித்யன்
பரிந்துரைத்த 25 நாவல்கள் இடம் பிடித்துள்ளன
இந்த பதினெட்டு எழுத்தாளர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்து குறைந்தது ஆறு பரிந்துரைகள் பெற்ற நாவல்களைப் பட்டியலிடுகிறேன். 150 நாவல்கள் பெரிய பட்டியல் என நினைக்கும் வாசகர்கள் இந்த பட்டியலில் இடம் பெறும் நாவல்களைத் தேடி படிக்க கேட்டுக் கொள்கிறேன்.
1.
மோகமுள்- தி ஜானகிராமன் – 13 பரிந்துரைகள்
2.
புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன் – 13 பரிந்துரைகள்
3.
தலைமுறைகள் – நீல பத்மநாபன் – 13 பரிந்துரைகள்
4.
ஜே ஜே சில குறிப்புகள்- சுந்தர
ராமசாமி – 12 பரிந்துரைகள்
5.
நாளை மற்றுமொரு நாளே – ஜி நாகராஜன் – 12 பரிந்துரைகள்
6.
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் – 12 பரிந்துரைகள்
7.
ஒரு புளிய மரத்தின் கதை
– சுந்தர
ராமசாமி – 12 பரிந்துரைகள்
8.
கடல் புரத்தில் – வண்ணநிலவன் – 11 பரிந்துரைகள்
9.
நினைவுப்பாதை – நகுலன் – 11 பரிந்துரைகள்
10.
புயலிலே ஒரு தோணி – ப சிங்காரம் –11 பரிந்துரைகள்
11.
அம்மா வந்தாள் – தி ஜானகிராமன் – 10 பரிந்துரைகள்
12.
கிருஷ்ணபருந்து — ஆ மாதவன் – 10 பரிந்துரைகள்
13.
பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு -10 பரிந்துரைகள்
14.
வாடி வாசல் – சி சு செல்லப்பா -10 பரிந்துரைகள்
15.
கருக்கு – பாமா – 9 பரிந்துரைகள்
16.
குருதிப்புனல்– இந்திரா பார்த்தசாரதி – 9 பரிந்துரைகள்
17.
நாகம்மாள்- ஆர் ஷண்முகசுந்தரம் – 9 பரிந்துரைகள்
18.
பள்ளி கொண்டபுரம் – நீல பத்மநாபன் -9 பரிந்துரைகள்
19.
பொய்த்தேவு – க நா சுப்ரமணியம் -9 பரிந்துரைகள்
20.
விஷ்ணுபுரம் – ஜெயமோகன் -9 பரிந்துரைகள்
21.
18 ஆவது அட்ச்க்கோடு – அசோகமித்திரன்- 8 பரிந்துரைகள்
22.
அபிதா – லா சா ராமாமிர்தம் – 8 பரிந்துரைகள்
23.
கோபல்ல கிராமம் – கி ராஜ நாராயணன் – 8 பரிந்துரைகள்
24.
இடைவெளி – சம்பத் – 8 பரிந்துரைகள்
25.
கம்பா நதி – வண்ணநிலவன் – 8 பரிந்துரைகள்
26.
பிறகு – பூமணி – 8 பரிந்துரைகள்
27.
சாயாவனம் – சா கந்தசாமி – 8 பரிந்துரைகள்
28.
வாஸவேஸ்வரம் – கிருத்திகா – 8 பரிந்துரைகள்
29.
அசடு – காசியபன் — 7 பரிந்துரைகள்
30.
கடலுக்கு அப்பால் – ப சிங்காரம் – 7 பரிந்துரைகள்
31.
காகித மலர்கள் – ஆதவன் — 7 பரிந்துரைகள்
32.
கமலாம்பாள் சரித்திரம்
– ராஜம் அய்யர் – 7 பரிந்துரைகள்
33.
கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன் – 7 பரிந்துரைகள்
34.
கோவேறு கழுதைகள் – இமையம் – 7 பரிந்துரைகள்
35.
மானுடம் வெல்லும் – பிரபஞ்சன் – 7 பரிந்துரைகள்
36.
நெடுங்குருதி – எஸ் ராமகிருஷ்ணன் – 7 பரிந்துரைகள்
37.
சதுரங்க குதிரை – நாஞ்சில் நாடன் – 7 பரிந்துரைகள்
38.
தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் – 7 பரிந்துரைகள்
39.
தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி – 7 பரிந்துரைகள்
40.
ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – 7 பரிந்துரைகள்
41.
பின்தொடரும் நிழலின் குரல்
– ஜெயமோகன் — 7 பரிந்துரைகள்
42.
தண்ணீர் – அசோகமித்திரன் – 7 பரிந்துரைகள்
43.
கள்ளம் – தஞ்சை ப்ரகாஷ் – 6 பரிந்துரைகள்
44.
கூளமாதாரி – பெருமாள் முருகன் -6 பரிந்துரைகள்
45.
மரப்பசு – தி ஜானகிராமன் – 6 பரிந்துரைகள்
46.
நாய்கள் – நகுலன் -6 பரிந்துரைகள்
47.
ஒரு கடலோர கிராமத்தின் கதை
– தோப்பில்
முகம்மது மீரான் – 6 பரிந்துரைகள்
48.
சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான்
– 6 பரிந்துரைகள்
49.
சில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன் – 6 பரிந்துரைகள்
50.
தாகம் – கு சின்னப்ப பாரதி – 6 பரிந்துரைகள்
51.
வாடாமல்லி- சு சமுத்திரம் – 6 பரிந்துரைகள்
52.
வெக்கை – பூமணி – 6 பரிந்துரைகள்
53.
ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன் – 6 பரிந்துரைகள்
54.
அவன் ஆனது – சா கந்தசாமி – 6 பரிந்துரைகள்
55.
ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ் -6 பரிந்துரைகள்
56.
காடு – ஜெயமோகன் – 6 பரிந்துரைகள்
57.
கொரில்லா – ஷோபா சக்தி – 6 பரிந்துரைகள்
58.
குள்ள சித்தன் சரித்திரம்
– யுவன் சந்திர
சேகர் — 6 பரிந்துரைகள்
59.
நல்ல நிலம் – பாவை சந்திரன் – 6 பரிந்துரைகள்
60.
நித்ய கன்னி – எம் வி வெங்கட்ராம் – 6 பரிந்துரைகள்
61.
புலிநகக் கொன்றை – பி ஏ கிருஷ்ணன் -6 பரிந்துரைகள்
62.
புணலும் மணலும் – ஆ மாதவன் – 6 பரிந்துரைகள்
63.
ரப்பர் — ஜெயமோகன் – 6 பரிந்துரைகள்
64.
செம்பருத்தி – தி ஜானகிராமன் – 6 பரிந்துரைகள்
65.
எட்டு திக்கும் மத யானை
– நாஞ்சில்
நாடன் – 6 பரிந்துரைகள்
150 நாவல்களில் இரண்டு நாவல்களும் அதற்கு மேலும் இடம் பெற்ற எழுத்தாளர்களும் அவர்களது
படைப்புக்களையும் இங்கே பட்டியலிட்டு இருக்கின்றேன்.
அடைப்புக் குறிக்குள் அந்த நாவல், தர வரிசையில் பெற்ற இடத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.
1.
ஆ மாதவன் – கிருஷ்ணபருந்து (24) , புணலும் மணலும் (122)
2.
ஆதவன் – என் பெயர் ராமசேஷன் (47), காகித மலர்கள் (51),
3.
அசோகமித்திரன் – 18 ஆவது அட்சக்கோடு (13), கரைந்த நிழல்கள்(20) , தண்ணீர் (52), ஒற்றன் (104) , மானசரோவர்(110)
4.
டி செல்வராஜ் – மலரும் சருகும் (86) , தேநீர் (120),
5.
இமையம் – கோவேறு கழுதைகள் (16), செடல் (91), ஆறுமுகம் (132)
6.
இந்திரா பார்த்தசாரதி –
குருதிப்புனல் (28), தந்திர பூமி (76) , சுதந்திர பூமி (147)
7.
ஜெயகாந்தன் – ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு
உலகம் (4), சில நேரங்களில் சில மனிதர்கள் (29) , ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (60)
8.
ஜெயமோகன் – விஷ்ணுபுரம் (11) , பின்தொடரும் நிழலின் குரல் (31), ரப்பர்
(45), ஏழாம் உலகம் (48), கொற்றவை (63) , காடு (73)
9.
க நா சுப்ரமணியம் – பொய்த்தேவு (8), ஒரு நாள் (79 )
10.
கல்கி – பொன்னியின் செல்வன் (12 ), சிவகாமியின் சபதம் (61),
தியாக பூமி (65), அலை ஓசை (128)
11.
கி ராஜ நாராயணன் – கோபல்ல கிராமம் (7), கோபல்லபுரத்து மக்கள் (43)
12.
லா சா ராமாமிர்தம் – அபிதா (70) புத்ர (130)
13.
எம் ஜி சுரேஷ் – அட்லாண்டிஸ் மனிதன் மற்றும்
சிலருடன் (113) , அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும் (114)
14.
எம் வி வெங்கட்ராம் – வேள்வித்தீ (38), நித்யகன்னி (57)
15.
நகுலன்- நினைவுப்பாதை (19), நாய்கள் (88), வாக்குமூலம்(101), நிழல்கள் (140)
16.
நாஞ்சில் நாடன் – எட்டுத் திக்கும் மத யானை (41) , தலை கீழ் விகிதங்கள் (77), சதுரங்க குதிரை
(85) , மாமிசப் படைப்பு (96) , மிதவை (143)
17.
நீல பத்மநாபன் – தலைமுறைகள் (10) , பள்ளி கொண்டபுரம் (15)
18.
ப சிங்காரம் – புயலிலே ஒரு தோணி (6), கடலுக்கு அப்பால் (80)
19.
பாமா – கருக்கு (71), சங்கதி (137)
20.
பால குமாரன் – மெர்க்குரிப் பூக்கள் (131), இரும்புக் குதிரைகள் (145)
21.
பெருமாள் முருகன் – கூளமாதாரி (75), நிழல் முற்றம் (89) , ஏறு வெயில் (100)
22.
பொன்னீலன் – கரிசல் (106), புதிய தரிசனங்கள் (108)
23.
பூமணி – வெக்கை (23), பிறகு (30)
24.
பிரபஞ்சன் – வானம் வசப்படும் (25), மானுடம் வெல்லும் (32)
25.
ஆர் ஷண்முகசுந்தரம் – நாகம்மாள் (18) , சட்டி சுட்டது (98)
26.
ராஜம் கிருஷ்ணன் – அலைவாய்க்கரையில் (115), குறிஞ்சித்தேன் (119)
27.
எஸ் ராமகிருஷ்ணன் – நெடுங்குருதி (33), யாமம் (69), உபா பாண்டவம்(83)
28.
சா கந்தசாமி – சாயா வனம் (14), அவன் ஆனது (39), தொலைந்து போனவர்கள் (121)
29.
சாரு நிவேதிதா – ஸீரோ டிகிரி (78), எக்சிஸ்டன்ஷியலிசமும் ஃபேன்சி
பனியனும் (103), ராஸலீலா (125)
30.
ஷோபா சக்தி – கொரில்லா (81), ம் (111)
31.
சி சு செல்லப்பா – வாடிவாசல் (27), ஜீவனாம்சம் (117)
32.
சிவகாமி – பழையன கழிதலும் (90), ஆனந்தாயி (116)
33.
சோ தர்மன் – கூகை (59), தூர்வை (149)
34.
சுந்தர ராமசாமி – ஒரு புளிய மரத்தின் கதை (2) , ஜே ஜே சில குறிப்புகள் (3),
குழந்தைகள்
பெண்கள் ஆண்கள் (93)
35.
தஞ்சை ப்ரகாஷ் – கரமுண்டார் வீடு – (105), கள்ளம் (118 )
36.
தி ஜானகிராமன் – மோகமுள் (1), அம்மா வந்தாள் (17), உயிர்த்தேன் (37), மரப்பசு (82), செம்பருத்தி (92), மலர் மஞ்சம் (150)
37.
தோப்பில் முகம்மது மீரான் –
ஒரு கடலோர
கிராமத்தின் கதை (42), சாய்வு நாற்காலி (56), கூனன் தோப்பு (107), துறைமுகம்(139)
38.
வண்ண நிலவன் – கடல் புரத்தில் (5), கம்பா நதி (74), ரெயினீஷ் அய்யர் தெரு (126)
39.
யுவன் சந்திரசேகர் – குள்ளச்சித்தன் சரித்திரம் (84), பகடையாட்டம் (129)
சில குறிப்புகள்
1.
இதில் தி ஜானகிராமன் எழுதிய 6 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. ஜெயமோகன் எழுதிய 6 நாவல்கள் பட்டியலில் இடம்
பிடித்துள்ளன. நாஞ்சில் நாடன் எழுதிய 5 நாவல்கள் பட்டியலில் இடம்
பிடித்துள்ளன. அசோகமித்திரன் எழுதிய 5 நாவல்கள் இடம் பிடித்துள்ளன.
2.
இலக்கியத் தரம் வாய்ந்த நாவல்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. வரலாற்று
நாவல்களில் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வானம் வசப்படும், மானுடம் வெல்லும் , யவனராணி, ரத்தம் ஒரே நிறம், காவல் கோட்டம் ஆகிய 7 நாவல்கள் இடம் பிடித்துள்ளன. துப்பறியும் நாவல்கள் , பொழுது போக்கு நாவல்கள் போன்ற
நாவல்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை.
3.
இதில் பெரும்பாலான நாவல்கள்
காலச்சுவடு, நற்றிணை, தமிழினி, கிழக்கு ஆகிய பதிப்பகங்களில்
வாங்கலாம்.
4.
2000 க்கு பிறகு வந்த நல்ல நாவல்கள் சில இந்த பட்டியலில் இடம் பிடிக்காமல்
இருக்கலாம்.
அதற்கு காரணம் போதிய பரிந்துரைகள் இல்லாமல் இருப்பதே காரணம். அது போல பழைய நாவல்கள் பல இந்த பட்டியலில்
இடம் பெறவில்லை. அவை இந்த கால கட்டத்தில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப் படவில்லை.
5.
மு வ நாவல்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. சுஜாதாவின் சமூக நாவல்கள் எதுவும் இதில் இடம் பெறவில்லை. தொடர்கதைகளாக வந்த பெரும்பான்மை நாவல்கள் அந்த காலத்தில் பிரபலமானவை என்றாலும் அவை இந்த
பட்டியலில் இடம் பெறவில்லை. மோகமுள் , பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம் போன்று சில நாவல்களே இடம் பிடித்துள்ளன.
நன்றி: என்.செல்வராஜ்
No comments:
Post a Comment