முன்பே சொல்லிவிடவேண்டும் என நினைக்கிறேன். திரிஸ்யம் படத்தில்
நடித்த மோகன்லாலைவிட பாபநாசத்தில் கமல் நன்றாகவே நடித்திருக்கிறார். முக்கியமாக, ரீமேக் என்பதால் இந்த ஓப்பீடு எப்படியும் நடந்தே தீரும், பலர் நன்றாக நடிக்கவில்லை என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் தமிழ்
சினிமாவின் கதாநாயகன் ஒரு மெளனியை போன்று இருக்க முடியாது. நம் சமூகம் கலகலப்பான சூழலிலும்
கூடிவாழும் இயல்புடைய கூட்டமாகதான் இருக்கிறது. ஆனால் மலையாள உலகம் அமைதியும் மென்மையும்
நிறைந்தது அங்கு அந்த சூழலுக்கு அவர் (மோகன்லால்) நடித்த நடிப்புதான் எடுபடும். அதைதான்
நம்சூழலுக்கு தகுந்தமாதிரி லேசாக சுயம்புலிங்கத்தை மாற்றியிருக்கிறார்கள். நம்முடைய
மக்களிடம் சினிமா பற்றி கேட்டுப்பாருங்கள்,
வீட்டுல இருக்கிற
பிரச்சனை போதாதா, சினிமாவாவது கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்
என்பார்கள். இந்த மக்களை சற்று சீரியசான படத்தை கொடுத்திருப்பதும் அதில் கமல் தைரியமாக நடிக்க வந்திருப்பதும்
பாராட்டுக்குரியது. படம் முழுவதும் அவரிடம் ததும்பும் லேசாக குதுகூலமும், அசட்டுதனமும் அவர் இதுவரை செய்திராத புதிய
விஷயங்கள்.
மோகன்லாலை அவருடன் ஓப்பீட்டு அவர்போல நடிக்கலாமே என்று கருத்து
சொல்லப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த இணைய உலகில் கமல் தைரியமாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது
பெரும் பாராட்டுக்குரியது. அவரிடம் இன்னும் நடிப்பு திறன் இருக்கிறது என்பதை நிரூபிக்க
இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மோகன்லால் தைரியமாக இதேப்போன்று வெற்றிப்பெற்ற ஒரு கமலின் படத்தை
மலையாளத்தில் நடிக்க முடியுமா என்று யாரும் கேட்ப்பதில்லை.
கமல் எப்போது துறுத்தி தெரியும் நடிப்பை வெளிப்படுத்த கூடியவர்.
இந்த படத்தில் அப்படி இல்லாமல் முற்றிலும் வேறு கமலாக நடித்திருக்கிறார். கடைசியில்
ஐஜியை சந்தித்துப் பேசி அழும் ஒரு இடம் தவிர மற்ற எல்லா இடத்திலேயும் அவர் கதாபாத்திரத்திற்கு
தேவையானதை மட்டுமே அளித்திருக்கிறார். தமிழ்சூழலுக்கு தேவையான அந்த இடம் சற்று அதிகம்தான்
என்றாலும், வேறு எந்த நடிகராலும் நடித்துவிடமுடியாதது. கதையின்படி சுயம்புலிங்கமான கமல்
மிக எளிய படிப்பறிவு அற்ற மனிதர். அவர் பேசும் பேச்சுகளும் நடத்தைகளும் எளிய மனிதருக்குரியதாக
இருந்தாலும் எல்லா விஷயங்களை அறிந்த மனிதராக இருக்கிறார். ஒரு பெரிய சிக்கலில் தன்
குடும்பம் மாட்டும்போது அதிலிருந்து அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை இன்நேரம்
எல்லா பட்டிதொட்டிகளிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.
ஜெயமோகனின் வசனம் இந்த படத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.
அவர் இல்லையென்றால் இந்த அளவிற்கு இந்தப் படம் பேசப்படுமா என்பது சந்தேகம் தான். அவரட்ட
அதிகம் பழக்கம் வெச்சுகிறதில்லை அவர் சிக்கன் கறின்னு சாப்பிடரவருல்ல, என்று சின்ன முறுவலை ஏற்பத்தும் வசனத்திலிருந்து
இந்த பாபநாசத்துல் கொஞ்சகொஞ்சமாக மூழ்கி கழித்துவிடுகிறோம் என்று கூறும் வசனம் வரை
அவரின் பங்களிப்பின் முக்கியத்துவம் தெரிகிறது.
கடைசி காட்சியில் கமல் நடந்துவந்ததைவிட மோகன்லால் அழகாக
நடந்துவந்ததுபோன்று தோன்றுகிறது. ஆனால் கடைசியில் ஐஜீயை சந்திக்கும் இடத்தில் மோகன்லாலைவிட
கமல் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்.
முதல் படத்தில் அடித்த பாடல்களை போன்று இருக்கிறது ஜிப்ரானின்
இசை. ஆனால் பின்னனி இசையில் அற்புதபடுத்தியிருக்கிறார். எல்லா நடிகர்களின் நடிப்பும்
இயல்பாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பும், தீவிரமும் கூடிவருகிறது.
இதே மாதிரியான படங்கள் தமிழில் தொடர்ந்து வெளியாக வேண்டும்.
1 comment:
எனக்குப் பொதுவா படங்களில் வரும் பின்னணி இசை பற்றிய குறை ஒன்று உண்டு. எல்லாக் காட்சிகளிலும் கொய்ங் கொய்ங் என்று பின்னணி இருக்கணுமா? அதிலும் ரொம்பவே சத்தமாக!
முக்கியமான வசனங்கள் வரும் இடங்களில் பின்னணி இசை என்பது இருப்பதே தெரியாமல் மெல்லிஸா இருக்கணும். ஆனால் படங்களில் இப்படி இருப்பது இல்லை. இதிலும் இப்படித்தான்:(
Post a Comment