ஆட்டிசம் என்பது ஒருவகை செயல்திறம் குறைபாடுள்ள நோய். அது
மனநோயோ, மனவியாதியோ அல்ல. திடீரென தோன்றி
திடீரென மறையும் நோய் வகை சேந்ததும் அல்ல. பல வகை காரணங்களால் பிறந்தக் குழந்தைக்கு
2 வயது முதலே தெரிய ஆரம்பிக்கும்.
இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் அந்த நோயால் ஏற்படும் பாதிப்புகளை சில நடைமுறைப்
பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி, ஒரு ஆட்டிச குழந்தைக்கு இருக்கும் ஒரு
பிரச்சனை மற்ற குழந்தைகளுக்கு இருக்க வாய்ப்பில்லை. பொதுவாக சில செய்கைகளால் அவர்கள்
என்ன கூறுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். வேண்டாம் என்பதை சில கண்களை சுருக்கி
அல்லது மூடிக் கொள்வதை வைத்து புரிந்து கொள்ள வேண்டிடியிருக்கும்.
பொதுவாக இக்குழந்தைகளை இருவகைகளாக பிரிக்க முடியும் பேசும்
குழந்தைகள், பேசாக் குழந்தைகள். பேசும் குழந்தைகள்
அனைத்தையும் பேசிவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. பேச்சுமூலம் அவர்கள் தங்கள் தேவைகளை
வெளிப்படுத்துவார்கள்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. அக்குழந்தைகளை
பொதுஇடங்களில் பார்க்கும்போது எந்த வேறுபாடு இல்லாமல் நடந்துக்கொள்கிறார்கள். ஆனால்
இந்தியாவில் இன்னும் அந்த வளர்ச்சி பெறவில்லை. பொதுஇடத்தில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன்
சேர்ந்தால் நம் குழந்தைக்கும் ஓட்டிக்கொள்ளும் என்று பயப்படும் பெண்களை இருக்கிறார்கள்.