விருது தொடங்கப்பட்ட நாளிலிருந்து அதன் கொண்டாட்டங்களை கவனித்து வருகிறேன். எந்த அதிகார குறுக்கீடுகளும், வரம்புமீறல்களும் இல்லாமல் ஒரு விருது சின்ன கட்டுப்பாடுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுவதும், சந்திப்புகள் ஒரு இனிய அனுபவமாக மாறும்வகையில் நண்பர்களுக்கிடையே இணக்கமான சூழலும் அமைவதை ஒவ்வொரு ஆண்டும் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. ஒவ்வொரு சமயமும் தூரமும், வேலையும் தடுத்தபடி இருந்தன. இந்தமுறை எனக்கு அளிக்கப்பட்ட வாசகசாலை விருது
தடுத்துவிட்டது. இரண்டு நாட்கள் நடக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவிற்கு இந்த ஆண்டு ஒரு நாள் நிகழ்வில், அதுவும் விருது அளிக்கும் நிகழ்வில், எப்படியோ கலந்துக்கொண்டுவிட்டேன்.