Showing posts with label முடிவெட்டுதல். Show all posts
Showing posts with label முடிவெட்டுதல். Show all posts

Monday, February 20, 2017

தலையை கொடுத்தல்



அவன் வெட்டுக்கு போயிருக்கான், அவனுக்கு தலைக்கு மேலே வேலை, தலையை கொடுக்க போயிருக்கான், என்று முடிவெட்டிவருவதை இப்படி பல வகையிலும் குறிப்பிடுவதுண்டு. முடிவெட்டுவதை குறித்து தனி ஜோக்குகளாகவே கேலி சித்திரங்களுடன் ஆனந்தவிகடனில் முன்பு வெளிவரும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நவீனத்துவம் முடிதிருத்துலாக இருந்திருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்குள்ளேயே இருந்த முடிதிருத்தல்கள் பொதுவெளியில் வந்தபோது குழப்பமாகத்தான் எதிர்கொண்டிருக்கிறார்கள் மக்கள். 

சில விநோதங்கள் அப்படியே தொடர்கின்றன, அவன் முடிவெட்டிகிட்டு வந்திருக்கான் அவனை தொடாதீங்க, என்று எச்சரிக்கை செய்ய வீட்டில் ஒருவர் இருப்பார். அணிந்திருக்கும் உடைகளை தனியே எடுத்து வைக்க வேண்டும். அதை தனியே அலசிப்போடவேண்டும். பின்புதான் துவைக்கவே செய்வார்கள். நீளமுடியை வைத்தால் கொஞ்சம் கிண்டல்களும், கொஞ்சம் புதுமைகளை செய்தால் அதிக அலட்சியங்களும் மக்களிடையே வெளிப்படும். சாதாரண முடிவெட்டலுக்கு மக்கள் ஏன் இத்தனை எதிர்வினைகளை செய்கிறார்கள் நினைக்கவே பயமாக இருக்கும்.