Showing posts with label மன்மதன் அம்பு. Show all posts
Showing posts with label மன்மதன் அம்பு. Show all posts

Friday, November 19, 2010

காதல் மன்னன் கவிதைகள்


வரவிருக்கும மன்மதன் அம்பு படத்திற்கு கமல் எழுதிய பாடல் ஒன்று இணையத்தில் கிடைத்தது. சினிமாவில் மட்டுமல்ல காதல் மன்னன், நிஜத்திலும் தான் என்று என்னத்தோன்றும் வரிகள். 



கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கைகோர்த்தாளா
?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை

கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்

காதலாய் மாறலாம் எச்சரிக்கை

கவிதை இலக்கியம் பேசினளாயின்
காசை மதியாள் எச்சரிக்கை

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா

உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக்கோள்

கூட்டல் ஒன்றே குறியென்றானபின்

கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்?
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை

ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்

காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
இப்பெண்ணுரைக்கெதிராய் ஆணுரை ஒன்றை இயற்றத் துணியும் அணி சேர்த்துக்கொள்.


_o0o_