Showing posts with label பிக் பாஸ். Show all posts
Showing posts with label பிக் பாஸ். Show all posts

Wednesday, July 5, 2017

பிக் பாஸ்: அடைக்கப்படும் மனது



புரூஸ் லீ முழுமையாக நடித்த மூன்று முழுமையான படங்களில் ஒரு நல்ல படமாக பிக் பாஸ் என்கிற படத்தைச் சொல்லலாம். ஹீரோயிசம் இல்லாமல் சாதாரண மனிதராக தோன்றிய படம். அற்புதமான சண்டைகாட்சிகளும் உண்டு. நண்பர்களைத் தேடி ஐஸ்பேக்டரிக்கு வரும் லீ அங்கு நடக்கும் ஒருவரை ஒருவர் தாக்கும் தொடர் சண்டைகளைக் கண்டு ஒதுங்கி இருந்துவிட்டு ஒரு கட்டத்தில் பொருக்கமுடியாமல் இறங்கி எல்லோரையும் தாக்குவார். வெற்றியும் பெறுவார். ஆனால் கட்டுரை அதைப் பற்றியதல்ல. இப்போது விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்னும் ஒரு வீட்டில் வாழுகின்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சிப் பற்றியது. 

இந்த நிகழ்ச்சி இந்தி, மலையாளம், கன்னடம், என்று முக்கிய மொழிகளில் உள்ள டிவி ஷோக்களாக நடந்திருக்கிறது. இந்தியில் பல பார்ட்டுகளாக நடந்திருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான நிகழ்ச்சி 100% உண்மையானது அல்ல. பல முன்பே பேசிவைத்து எடுக்கப்பட்டவைகள். எப்படி ஒரு டிவி நாடகத்தை மக்களின் டிஆர்பி ரேட்டை பொருத்து கதையை மாற்றிக் கொள்கிறார்களோ அதுபோல நடக்கும் நிகழ்ச்சியில் அவ்வப்போது சில ஏற்றங்களைக் கொண்டு மாற்றி அமைக்கிறார்கள்.