கொச்சி நகரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் பெண்கள் நாப்கின்கள்
அணிந்துவருக்கிறார்களா என்பதை கண்டறிய சோதனைச் செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அதற்கு
காரணம் அதை பயன்படுத்தியபின் கழிவறையில் போட்டுவிடுவதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர்
செல்லாமல் சாக்கடையில் பிரச்சனை ஏற்பட்டுவிடுவதை தடுக்க வேண்டும் என நிர்வாகம் நினைக்கிறது.
அதற்காக பெண்கள் பயன்படுத்திய நாப்கின்களை திரும்ப தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்
என கட்டளையிட்டுள்ளது. ஆகவே அங்கு வேலைப் பார்க்கும் பெண்கள் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை
திரும்ப அவர்கள் பேகில், டிபன் பாக்சில் வைத்து எடுத்துச்
செல்கிறார்கள். இதை அறிந்த பெண்ணிய அமைப்புகள் அங்கு தொடர்ந்து நாப்கின்களை கொரியரில்
அனுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் பொதுவில் நாப்கின்களை எடுத்து செல்வது போன்றவைகள்
அசிங்கமாக பார்க்கபடுவது உண்டு. நாப்கின் பயன்படுத்தும் முறை கிராமத்தில் பெரிய அளவில்
பரவவில்லை. கிராமங்களில் சில பெண்கள் பயன்படுத்தி அதை குப்பையில் போடும்போது அதைப்
பார்த்தோ அல்லது யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் வீடு தேடிவந்து இப்படி குப்பையில்
பொறுக்க முடியாமல் திட்டி செல்லும் பாட்டிகள் உண்டு.