பின்பக்கத்தில் சற்று நீண்ட தலைமுடியும் டை அடித்த ஆனால் வேர்களில் வெள்ளை முடி முளைத்த தோற்றத்துடன் தலையை இங்குமங்குமாக திருப்பியபடி மைலாப்பூரில் ஒரு கடையில் வெத்தலைப் பாக்கு, புகையிலையை வாங்கி மென்றபடி நின்றுக் கொண்டிருப்பார் கிரேஸிமோகன். தொண்ணூருகளின் மத்தியில் அப்படி அவரை மாலை வேளைகளில் பார்த்திருக்கிறேன். அதேபோல அடையாறில் ஒரு கடையில் சிகரெட் குடித்தபடி நிற்கும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் பார்த்திருக்கிறேன். இவர்களிடம் சும்மாவேணும் கை கொடுத்துவிட்டு போவோம். பகோப விடம் என்ன எழுதுறீங்க இப்ப என்றால் நாவல் என்பார். எதில எழுதுறீங்க என்றால் உல்லாச ஊஞ்சல்ங்க என்பார். மீண்டும்
ஒரு முறை கை கொடுத்துவிட்டு விடைபெறலாம். கிரேஸிமோகன் அதைவிட சுவாரஸ்யமாக பேசுவார். பேசும்போது பின் மண்டை தனியாக ஆடும். எல்லா கேள்விகளுக்கும் அவர் பதிலளிப்பார். ஒரு சின்ன கூட்டம் அவர் முன் நின்று கேட்டுக் கொண்டிருக்கும். பக்கத்தில் திரும்பி கடைக்காரரிடம் ஒரு பீடா கேட்டு வாங்கி மெல்லுவார். போகும்போது இன்னொன்றை வாங்கி மென்றுகொண்டே செல்வார். பேசிய மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். அதை அவர் முகமே காட்டிக் கொடுத்துவிடும். அவர் யாரிடமும் பேசவில்லை. தன்னை ஒரு நிலையில் நிதானப்படுத்திக் கொள்கிறார் அவ்வளவுதான்..
Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts
Monday, June 10, 2019
Tuesday, November 17, 2015
நாடகபாணியும் விஜயகுமாரியும்
நான் சின்ன வயதில் விஜயகுமாரியின் ஒரு பழைய படத்திற்கு சென்று
படம் முழுவதும் அழுதுக் கொண்டேயிருந்தது நினைவிருக்கிறது. இன்று அவரது படத்தை பார்க்கும்
யாவரும் 'ஏன் இவ்வளவு எக்ஸ்பிரசன், தேவையா இது' என்பார்கள். நானும் அப்படிதான்
நினைக்கிறேன். ஆனால் அவர் நடித்த சில படங்களில் அவர் செய்யும் முக சேட்டைகளை நான் ரசிக்காமல்
இருந்ததில்லை. 'இந்த மன்றத்தில் ஓடிவரும்' பாடலில் அவர் செய்யும் முகபாவத்தை அதிகம் ரசித்திருக்கிறேன். குறிப்பாக
திடீரென ஒரு ஆணின் பாடல் குரல் கேட்டதும் அது யார் என்று அவர் அலைமோதும்போது செய்யும்
முகபாவத்தை சொல்லலாம். ஒரு மலரைப் பறித்து தூக்கி எறிவார், வேகவேகமாக நடந்துசெல்வார்,
தலையை இங்குமங்கும்
திருப்பி தன் சலிப்பை வெளிப்படுத்துவார். இப்படி நிறைய செய்தாலும் அவர் அண்ணன் கையை
பிடித்ததும் நிற்பது தன் அண்ணன் தான், அவருக்கு தன் மனவேதனை கூறியதை
கேட்டுவிட்டதே என்று அவர் செய்யும் முகசேட்டைகள், கண்களை
பெரிதாக்கி, உதடுகளை குவித்து, தன் கையை பலமுறை உதறி,
குவிந்த உதட்டில்
விரலை வைத்து என்று எத்தனை பாவங்களை ஒரே சாட்டில் செய்துவிடுகிறார். ஆச்சரியம்தான்.
Subscribe to:
Posts (Atom)

