Showing posts with label சி3. Show all posts
Showing posts with label சி3. Show all posts

Tuesday, February 14, 2017

துரை சி3



சிவாஜிக்கு செளத்திரி மாதிரி, ரஜினிக்கு அலெக்ஸ் பாண்டியன் மாதிரி சூர்யாவிற்கு துரை சிங்கம். எம்ஜியார், கமல், விஜய், அஜித் போன்ற முன்னனி நடிகர்களால் செய்யமுடியாததை இந்த மூவரால் மட்டுமே முடிந்திருக்கிறது. விக்ரம்க்கு சாமி கைகொடுத்தாலும் பெரியளவில் இல்லை என்று சொல்லவேண்டும். இந்த கதாபாத்திரம் மிக தைரியமாக அதேவேளையில் புத்திசாலித்தனமாக செயல்படுவர். அந்த பாத்திரத்தின் முகபாவனைகள் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி அமைய வேண்டும் என்பது முக்கியம்.

சிவாஜி, ரஜினியைவிட மிக நன்றாகவே அந்த பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார் சூர்யா. விளையாட்டுதனமான ஆக்ரோஷத்தால் எதையும் செய்யும் விஜய், அமைதியான ஆக்ரோஷத்தால் எதையும் செய்யும் அஜித்தால், கட்டுப்படுத்தப்பட்ட ஆக்ரோஷமாக செய்யும் சூர்யாவை நெருங்கமுடியாது என தோன்றுகிறது. பாட்டுபாடும் முறைகளில் ஓபன் வாய்ஸ் பாடல் வகை என்று ஒன்று உண்டு. வாய் திறந்து உச்சஸ்தானியில் பாடுவது. எல்.ஆர்.ஈஸ்வரி, நித்யசீ போன்றவர்களின் பாட்டுபாடும் முறை இப்படிதான் இருக்கும். அந்த மாதிரியான ஓபன் ஆக்டிங் வகை சூர்யா செய்திருக்கும் துரை சிங்கம். இந்த வகை சூர்யாவிற்கு நன்றாகவே வருகிறது. இப்படி ஒரு படம் செய்யவேண்டும் என நினைத்தால் விஜய் அஜித் இருவரும் இதைதாண்டி செய்து காட்டினால் தான் பெயரெடுக்க முடியும் இல்லை என்றால் அந்த பாத்திரம் கேலியாக முடிய வாய்ப்புண்டு. அத்தோடு சூர்யாவின் உடற்கட்டு பொருத்தமாக இருக்கிறது. அழகிய வடிவமைப்பில் உடலை பேணும் சூர்யா தொடர்ந்து சிங்கத்தை தக்க வைக்க முடிகிறது.