கோபம் இயலாமையின் வெளிப்பாடு என்பார்கள்.
சில கோபப்படும் நபர்களை காணும்போது பரிதாபமாக, சங்கடமாக இருக்கும். அதிலும் சிலர் இயல்பாகவே கோபத்திற்கு
பழக்கப்பட்டவர்கள் போல் தெரிவார்கள். வீட்டில், அலுவலகத்தில், வெளியே பொதுஇடத்தில் சின்ன ஏமாற்றங்கள்கூட மனிதர்களை வெறுபடைய வைத்து கோபம் கொள்ளவைக்கின்றன. சாதாரண உரையாடல்கள் முதல் சமூக அவலங்களை எதிர்கொள்ளும் வரை எல்லாவற்றிற்கும் கோபப்பட வேண்டியிருக்கிறது.
அதிகம் கோபம் வரும் நபர்களிடம்
குழந்தை மனதோடு இருந்துவிட்டால் பிரச்சனைகளை எளிதாக தாண்டிவிடலாம், கோபத்தை விட்டுவிடலாம்
என அறிவுறுத்துவதை பொதுவாக காணமுடியும். ஆன்மீகம், மருத்துவம் இலக்கியம் போன்ற துறைகள் மனிதன் அவன் மனதை ஒரு குழந்தையின் மனதுபோல வைத்துக் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறது. கோபத்தை கட்டுப்படுத்த அதுதான் சிறந்த வழி என்கிறது. கோபப்பட்டு வெறுப்பில் நிற்கும் சமயங்களில் நானும் நினைப்பதுண்டு ஏன் குழந்தையாக இருந்திருக்கலாமே என்று.
