பட்டினத்தார் என்னும் சினிமா டிவியில் ஓடிக்கொண்டிருந்தது.
அதில் ஒரு அந்தனர் தன் கோவில் பணிகளை முடித்து வீடு நோக்கி வந்துக் கொண்டிருக்கும்போது
ஒருவர் வேலைதேடி அவரிடம் கேட்கிறார். அவர் கேட்டநபர் இப்போது இல்லை என்றது, தன்னிடம் இருந்த தேங்காய் பழங்களை அவர்
பசிக்கு கொடுத்துவிடுகிறார். கையில் எதுவும் இல்லாமல் வீட்டிற்கு வரும் அவரை அன்புடன்
வரவேற்கிறார் அவர் மனைவி, வீட்டில்
பொங்க ஒரு மணி அரிசிகூட கிடையாது என்கிறார். வாசலில் ஒரு இடையில் ஒரு உடைமட்டும் உடுத்தி
மொட்டை தலையுடன்,
ருத்திராட்ச மாலைகள்
ஆங்காங்கே தொங்க வரும் பண்டாரம் அவர் வீடு வாசல் வந்து பிட்சை கேட்டதும், அவர் செய்வதறியாது நின்றிருக்கும்போது
மனைவி தன் தாலியை எடுத்துக் கொடுத்து விற்று வர சொல்கிறார். அப்படி செய்து அவருக்கு
அன்னமிடுகிறார்கள். இப்படி ஒரு
நடைமுறை முன்பு இருந்திருக்கிறது நம் நாட்டில். பல பஞ்சங்களைக் கண்டு, பசியால் வாடி பல தலைமுறைகளைக் கடந்து
வந்த நாம் இன்று அப்படி ஒரு காட்சி நடக்கவோ, பார்க்கவோ, கேட்கவோகூட
முடியாது.
சாலையில் செல்லும்போது காவிஉடையணிந்த சாமியார்கள் யாராவது
கைகாட்டினால் நிறுத்தாமல் கடந்து சென்றிருக்கிறேன். ஒரு முறையல்ல, பலமுறை நடந்திருக்கிறது. சாமியார் எல்லாம்
ஏமாறுபவர்கள் என்ற் எண்ணம் எப்போதும் நமக்கு இருக்கிறது. சென்னையில் ஒரு கடையில் சாமான்
வாங்கி இருசக்கர வாகனம் நோக்கி வரும்வழியில் வெள்ளைஉடை அணிந்து நெற்றியில் நாமம் தரித்து
கண்களில் ஒளிதெரிய நின்ற ஒரு கிராமத்து நபர் ஒருவர் என்னை நிறுத்தி உங்கள் மனதில் உள்ளதை
தெரிவிக்கட்டுமா என்றார். முதலில் இது ஏமாத்து வேண்டாம் என்று தோன்றினாலும் சின்ன குறுகுறுப்பில்
சிரித்தபடி நின்றேன். பேசியே என்னை மயக்கி 2000ரூ லவட்டிச் சென்றார்.