ஒரு தனியார் பேருந்தில் சமீபத்தில்
பயணம் செய்தேன். தனியார் வண்டி என்பதால் கிராமமக்கள் எல்லாம் ஏறினார்கள். அவர்கள் நிற்கும்
இடங்கள் ஓட்டுனர் நடத்துனருக்கு தெரிந்திருந்தது. அரசு பேருந்தைவிட கட்டணம் மிகக்குறைவு,
எல்லா இடங்களிலும் நிற்கிறார்கள், ஆனால் குறித்த நேரத்தில் அரசு பேருந்தைவிட முன்பே
சென்றுவிடுகிறார்கள். ஆச்சரியம்தான். நடத்துனரின் சிடுசிடுப்புகள் இல்லாமல் சரியாக
கொண்டு சென்றுவிடுகிறார்கள். ஆகவே கூட்டம் அம்முகிறது.
என்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள்,
நின்றிருந்தவர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருமே கிராமத்துகாரர்கள். ஒயர் கூடையை வைத்திருக்கிறார்கள்
அல்லது பெரிய துணிப்பை வைத்திருக்கிறார்கள் அல்லது பெரிய தூக்குவாளி. மெல்லிய புன்னகையுடன்
ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்து பேசியபடி வருகிறார்கள். திரும்பி பார்ப்பதற்குள் அடுத்த
ஸ்டாப்பில் இறங்கிக் கொள்கிறார்கள்.
