வாசிப்பை நேசிக்காமல் இருக்க முடியாது என்று எந்த வயதில் நினைக்க ஆரம்பித்தேன்
என சொல்வது கடினம். ஒருநாளைக்கு சில பக்கங்களாவது படித்துவிடுவது என்று வழக்கமானது
மிக தற்செயல்தான். ஒவ்வொரு வருடமும் ஒரு திட்டமிடலுடன் ஒரு பட்டியலும் தயாராகிவிடுகிறது.
ஆனால் அதிலிருந்து நூல்களின் தேர்வு அப்போதைய மனநிலையை பொருத்தது என நினைக்கிறேன்.
பாதியில் விட்டுவிட்ட நூல்கள்தான் அதிகம். சில காரணங்களுக்காக அவைகளை மனம் தொடரமுடியாமல்
இருக்கும். ஒரேவகையான நூல்களை தொடர்ந்து வாசிப்பதும் அதனால்தான் என நினைக்கிறேன். இபுத்தகங்களினால்
வாசிப்பு அதிகரித்திருக்கிறது. கண்கள் சோர்வடையாமல் இருப்பதால் தொடர்ந்து வாசிக்க முடிகிறது.
பட்டியலில் இருந்த அபுனைவுகளில் பெரிய புத்தகங்களை அதிகம் வாசிக்கவில்லை என தோன்றுகிறது.
சில வாசிக்காமல் பாதியில் இருப்பதும் ஒரு காரணம். இந்த ஆண்டிற்கு இதைவிட அதிகம் வாசிக்க
வேண்டும் என்பதே இலக்கு. பார்க்கலாம்.
(e - இபுத்தகம்)