Thursday, December 3, 2020

மலைச்சாரலில் இளம் பூங்குயில்


 ஒரு குடும்பத்தின் கதை (1975) என்கிற படத்தில் வரும் பாடல் இது. இதன் இசையமைப்பாளர் ரலீல் செளதிரி என நினைத்திருந்தேன், ஆனால் இசைத்தது சங்கர் கணேஷ். பாடலின் வரிகளை பார்க்கும்போது கன‌மாக எழுதும் கண்ணதாசன் என நினைப்போம், எழுதியவர் வாலி. பொதுவாக வாலி எளிமையாக எழுதுபவர். கேட்பவர்கள் புரியவேண்டும் என நினைப்பதாக பேட்டிகளில் சொல்லியவர், ஆனால் இந்த பாடலில் நிஜமாக மெனெக்கெட்டு நன்றாக எழுதியது போன்றிருக்கிறது. பாடலை பாடியவர் யேசுதாஸ், பின்னணி ஹம்மிங் சசிரேகா. சிறப்பான அவரது பாடல்களில் இருக்க வேண்டிய பாடல். நல்ல காட்சியமைப்பும், படம் வெற்றிபெறாததும் பாடல் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை என நினைக்கிறேன். பாடல் ரசிகர்கள் ஒருமுறை கேட்டால் மீண்டும் நினைவில் வைத்து கேட்டுக் கொண்டேயிருப்பார்கள் என நம்பதோன்றும் பாடல்.
 

"மார்பினில்", "திருவீதி', "நான்தேடும்" போன்ற இடங்களில் இருக்கும் அழுத்தம் நம்மை மீண்டும் பாடவும் கேட்கவும் செய்கிறது. ஒருமுறை முயற்சி செய்க.


மலைச்சாரலில் இளம் பூங்குயில்
அதன் மார்பினில் ஒரு ஆண்குயில்
அது நானல்லவா துணை நீயல்லவா
அந்த கீதம் நாம் பாடும் நாளல்லவா

ஈரேழு ஜென்மத்தின் பந்தம் இது
ஒரு இழைகூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது
எந்தன் திருவீதி வழிதேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது

(மலைச்சாரலில்)

பனி தூங்கும் மலரே உன் மடி என்பது
இரு கனி தூங்கும் தேன் திராட்சை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது
அதில் நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது

(மலைச்சாரலில்)

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையானப் பாடல்
பதிவில் பாடலின் இணைப்பினையும் கொடுத்திருக்கலாம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நான் ரசித்த பாடல்களில் ஒன்று. திரைப்படமும் நன்றாக இருக்கும், நான் பார்த்துள்ளேன்.