Monday, June 1, 2020

பொய்யை உண்மைச் செய்தியாக்குவது



என்ன
ஒரு கேவலமான சிந்தனை. பங்களாதேஷில் 2016ல் நடந்த ஒரு நிகழ்வை இந்தியாவில் நடந்ததாக கூறி மக்களை திசை திருப்பவது பத்திரிக்கை தர்மமா? இதன் ஆசிரியர் நடந்து செல்லும் அகதிகள் மேல் கவலை கொள்ளுங்கள் என்று அறிவுரை வேறு கூறுகிறார். நடந்து செல்லும் அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாத பங்களாதேஷி, ரோகிங்கீயாக்கள் என்கிறது ஒரு செய்தி.


-கே.ஜே. அசோக்குமார்

இதில்
என்ன கேவலம்? இது வேறும் ஓவியம். இது என்ன புகைப்படமா? ஒரு நிகழ்வின் சாரத்தை காண்பிக்கும் ஓவியம். அதற்கான உந்துதல் வேறொரு புகைப்படம் அவ்வளவு தான். வெறும் புகைப்படத்தைப் போட்டாலே நிலைமை குரூரமாக இருக்கிறது. இதிலெல்லாம் அறச்சீற்றம் கொள்வது அலாதியான குணம். கடந்த இரண்டு மாதங்களாக நீங்கள் எழுதியதில் ஒன்று கூட நம் கண் முன் நடக்கும் மனித அவலம் பற்றி இல்லை. இந்த லட்சணத்தில் ஒரு ஓவியத்தை குறை சொல்கிறீர்கள். அதுவும் விதண்டாவாதமாக.

-அரவிந்தன்
கன்னையன்

அன்புள்ள அரவிந்தன் கன்னையன்

அது
என்னவோ தெரியவில்லை, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசதியாக செட்டில் ஆனவர்களுக்கு தான் இந்தியாவில் நடக்கும் சிறு அவலங்கள் கூட கண்களுக்கு எளிதாக தெரிய ஆரம்பித்துவிடுகின்றன. நீங்கள் கொஞ்சம் வசிக்கும் அமெரிக்காவையும் கணக்கில் கொள்ளலாம்.

சரி
கொஞ்சம் விளாவாரியாகவே பேசுவோம். சமீபத்தில் தில்லியில் நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தில் உங்கள் மனித அவலம் பேசியதா? இப்போது கொரோனா வந்தபோது இந்தியாவிற்கு உதவிகளை செய்தீர்களா அல்லது பணம் அனுப்பினீர்களா? நான் இருக்கும் பகுதிக்கு தினமும் உதவிகளை (உழைப்பாகவும்/பணமாகவும்) செய்து கொண்டிருக்கிறேன். இதை படம்பிடித்தி முகநூலில் அளிக்க வேண்டுமா? அதைதான் விரும்புகிறீர்களா அப்போதுதான் நம்புவீர்களா?

எல்லோரும்
தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அத்தோடு முகநூல் மனிதர்களை காட்டும் கண்ணாடியும் அல்ல. நான் புனைவு ஆசிரியனாக எதுவரை இம்மாதிரியான விஷயங்களில் செல்லவேண்டும் என்கிற அக்கறையும் எனக்கு இருக்கிறது. ஒரு சின்ன கோபத்தை முகநூலில் காட்டநினைக்கும்போது, அதற்கு ஒரு பெரிய கும்பல் வந்து உனக்கு என்ன உரிமை இருக்கிறது என கேட்கும் அவலத்தை என்ன சொல்வது?
ஒரு புகைப்படம் அட்டைப்படமாக போடும்போது புலனாய்வு பத்திரிக்கை போன்று செயல்படுவதே எரிச்சலை உண்டுபண்ணுகிறது. ஒரு முஸ்லீம் பெண்ணை இந்துவாக நெற்றியில் குங்குமமிட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு பங்களாதேஷில் நடந்ததை இன்று நடந்தது போன்று இந்த சூழலில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நடந்து செல்லும் அவலத்தை கொண்டுள்ள சூழலில் வெளியிடுவது பிரச்சனையை பெரிதுபடுத்தி அதை ஓட்டுக்களாக மாற்றும் அசிங்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. இதில் இருக்கும் அரசியலை மட்டும் கவனியுங்கள், அரசு செய்வதை, மக்கள் செய்வதை, அவர்கள் எண்ணத்தை நீர்த்துப் போக செய்யும் அசிங்கம் இருக்கிறது. ஆகவேதான் இந்த கோபம் அதை விதண்டாவாதமாக நீங்கள்தான் நினைக்கிறீர்கள்.

மக்கள் நடந்து செல்லும் அவலம் எனக்கு சங்கடமாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? கவலைப்படுவதால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? ரயிலில் ஒவ்வொரு சிறுநகரத்திலிருந்து இடம்பெயரும் மக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு நடக்கிறது. இரு தினங்களுக்கு முன் தஞ்சையிலிருந்து ஒரு ரயில் கிளம்பியது. சுற்றுப் பகுதியில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் அதில் கிளம்பித்தான் சென்றார்கள்.

ரயில்களை தவிர்த்து
மக்கள் நடந்து போவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அதன் காரணங்கள் எல்லோருக்கும் தெரியாது.

1.
உடனே கிளம்பி செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்கு ரயில் சரிவருவதில்லை. காத்திருக்க வேண்டும் அவர்களின் முறை வரும்வரை. முன்பே பதிவு செய்தவர்களெல்லாம் போனபின்னே போகமுடியும்.

2.
வேறுமொழிக்காரர்கள் என்பதால் அதன் நடைமுறைகள் அவர்களுக்கு புரிபட நாளாகிறது.

3.
சில இடங்களில் லஞ்சம் கொடுத்து முன்னர் செல்கிறார்கள், பணமில்லாதவர்கள் எதுவும் செய்யமுடிவதில்லை

4
சிலரிடம் சரியான ஆவணங்கள் அவர்களிடம் இருப்பதில்லை, ஒன்று தொலைத்திருப்பார்கள் அல்லது எடுக்காமல் இருந்திருப்பார்கள்.

5
ரோகிங்யா, பங்களாதேஷ் வாசிகளுக்கு ஆவணங்கள் இருக்காது அவர்கள் நடந்துதான் செல்லவேண்டியிருக்கும்.

காங்கிரஸ்
கட்சி நடந்து போகிறவர்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்கிறோம் என்று போலியாக ஆட்டோ எண், லாரி எண்ணை அளித்து வேடிக்கை செய்தபோது நீங்கள் பொங்கி எழவில்லையே.!

சிறிதும்
பெரிதுமான நடைமுறை சிக்கல்களை, எதிர்க்கட்சியும், இந்தியாவை வெறுப்பவர்களும் அல்லது வெறுப்பவர்களுக்கு சாதகமாக பேச நினைப்பவர்களும், பெரிதாக்கி தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். அந்த கேவலத்தை கேள்வி கேட்க நினைப்பது தவறில்லை என்றே நினைக்கிறேன்.

-கேஜே

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனிதம், நியாயம் அவ்வளவுதான்...