Wednesday, April 29, 2020

ஜெயமோகனின் முதல் ஆறு


முதல்காதல் துளிர்க்குமிடம் எப்போதும் நினைவில் நிற்கும். அந்த இடத்தை கடக்கும்போது, பார்க்கும்போது நிகழும் வேதியியல் மாற்றத்தை முதல் வேதியியல் மாற்றத்தோடு நினைவு படுத்திக்கொள்ளமுடியும். ஆனால் முதற்காதலுக்கு முன்னாலும் பின்னாலும் நிகழ்பவைகள் முற்றிலும் வேறானவைகள்

Tuesday, April 28, 2020

ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்


சிறுசிறு கீற்று ஒளிகளின் வழியே முன்பு கண்ட இருள்சுரங்கத்தை நினைவிலிருந்து எடுத்துச் சொல்வது போன்றது பத்துலட்சம் காலடிகள் சிறுகதை அல்லது குறுநாவல். அப்படிதான் நினைக்கிறேன். ஓளச்சப்பன் அதுவும் குடியில் இருக்கும்போது தன் நினைவுகளில் இருந்து மீட்டு பலமுறை அசைப்போட்ட அல்லது ரகசியமாக சொன்ன ஒன்றை சொல்வது தான் கதை சாரம். அந்த கூட்டதில் கேட்டும் அரைதமிழ் எழுத்தாளன் போல நாமும் ஆர்வமாக இருக்கிறோம். ஓளசேப்பன் சொல்வது கேரளத்தில் இருந்த மாப்பிள்ளை முஸ்லீங்களை பற்றியது. அவர்களின் வாழ்க்கை முறை, கடல்கடந்துவந்த பயணம், இன்றைய  நிலை. ஆனால் கிருஸ்தவ, பிராமன, நாயர், முஸ்லீம், கம்யூனிஸ்ட் என்று எல்லோரை கிண்டலடிக்கிறார்கள்.

Monday, April 27, 2020

மலையாள திரைப்படங்கள் தமிழரை எதிரியாக காட்டுவது ஏன்? - சாம்ராஜ்

இயல்பான தேடுதலில் மலையாள சினிமாவை அடைந்தவன் நான். தமிழ் சினிமாவின் போதாமையும், இலக்கிய வாசிப்பும் என்னை அதை நோக்கி ஈர்த்தன. 80 களின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். யதார்த்தமான கதையமைப்பும், நம்பகமான காட்சியமைப்பும், மிகையில்லாத நடிப்பும், நகைச்சுவையும் என்னை சந்தோசப்படுத்தின. வெறிகொண்டு மலையாள சினிமா பார்க்கத் தொடங்கினேன். (நண்பர்கள் மதுரை மோகன்லால் ரசிகர் மன்றத்தின் தலைவன் நான் என்று என்னை கேலி செய்ததுண்டு.)

Saturday, April 18, 2020

ஆலாவின் வலசை: இச்சா - ஷோபா சக்தி



சித்தர்மரபுகளற்ற ஒரு வெட்டுப்பட்ட சைவ மதமும் மறுபிறப்பை மறுக்கும் புத்தமதமும் மோதிக் கொள்வதில் இருக்கும் பதற்றமான நிச்சயமின்மையை’ நாம் இலங்கைப் போர் பின்னணியில் பார்க்கிறோம் என நினைக்கிறேன். இஸ்லாம் ஒருபக்கம் இருந்தாலும் இரு இனங்களில் மோதல்களில் தெரியும் வேகம் அவை மறுபிறப்பை மறுப்பதனால் எழுந்தது என நினைக்க தோன்றுகிறது. வேறுபிறவியில் ஒருவன் அடையும் துன்பத்திற்கு பயந்து செயல்படுவது அல்லது செயல்படாமல் இருப்பது இந்திய மனநிலை. இந்தியா எதிர்செயல்பாடுகளில் மிதவாத போக்கை கடைபிடிப்பதில் இரண்டாயிரம் வருடத்திற்கு மேலான அனுபவம் இருக்கிறது. இந்திய மாவோயிஸ்டுகள், போடோ இனத்தவர்கள் இந்துமதத்திலிருந்து வெளியேறியவர்கள். நீண்டகாலமாக இக்கொள்கையில் ஊறியவர்கள். அவர்கள் மிதவாதத்தை தாண்டியதை அதிலிருந்துதான் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

Monday, April 13, 2020

கொரோனா காலத்தில் எப்படி வாசிக்கலாம்?



பகத்சிங் தூக்கு மேடைக்கு செல்வதற்கு முன்புவரை வாசித்துக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுவதுண்டு. வாசிப்பினால் ஒருவர் அடையும் உணர்ச்சிகள் வெளிவுலகில் இருக்கும் உணர்ச்சிகளை விட உன்னதமானவை என்று சொல்லாமல் சொல்லும் சம்பவம் அது. புறஉலக இன்பதுன்பங்களை கடக்க வாசிப்பு எவ்வளவு பயன்பட்டாலும் புறஉலகை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அதை சிறிது நேரம் மறக்கலாம் அல்லது ஒத்திப்போடலாம். பல சமயங்களில் வாசிப்பிலிருந்து அதற்கான தீர்வுகளும் கிடைக்கலாம். தமிழ் இந்துவில் (12/4/2020) ஜி.குப்புசாமி எழுதியிருக்கும் கரோனா காலத்தில் என்னென்ன வாசிக்கலாம்? என்கிற கட்டுரையிலிருந்து எப்போது அல்லது எப்படி வாசிக்கலாம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்த்ததின் விளைவு இது. அதேவேளையில் இது என் அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே.

Thursday, April 2, 2020

தன்முனைப்பு வாழ்க்கை: எழுதாப் பயணம் - லக்ஷ்மி பாலகிருஷ்ணன்



தாய் தன் பிள்ளையை தன்னுடலின் ஒரு பகுதி என்றே நினைக்கிறாள். எப்போதும் குழந்தையை அணைத்துக் கொண்டிருப்பதையும், அவள் இடையில் ஒசித்து வைத்திருப்பதிலும் தெரியும். தந்தை தன் பிள்ளையை தன்னுயிராகவே நினைக்கிறார். ஆகவே தன் பிள்ளையை நான்தான் அவன்/அவள் என நினைக்கிறார். நீண்டநாள் குழந்தையின்மைக்கு பின்னான குழந்தை பிறப்பால், அல்லது தன் பால்ய கால மோசமான அனுபவங்களின் விளைவாகவும், அவர்களிடம் இந்த பண்பு அதிகமாகவே தெரியும்.