Sunday, March 29, 2020

கொரோனாவின் விளைவுகள்



கொரோனோ என்னும் தொற்றுநோய் திடீரென்று உலகம் முழுவதும் உள்ள மனிதர்களின் வாழ்வில் புகுந்துவிட்டது. தப்பிக்க முடியாமல் சகிக்க முடியாமல் நம் வாழ்வின், தினசரி இயக்கங்களில் இணைந்துவிட்டது. சம்பந்தமற்ற புதியவரவு. இதுவரை கேள்வியே பட்டிராத ஒன்று.

ஆனால் அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என கொஞ்சம் யோசித்து பார்த்தால் சில உண்மைகள் புரிந்தன.

Saturday, March 28, 2020

ஆய்வக எலி: அத்துமீறல் - அமலன் ஸ்டேன்லி

 
வேட்டையாடுதலில் உயிர்தியாகம் (animal sacrifice) என்று ஒரு வார்த்தை சொல்லப்படும். கொலை என்கிற வார்த்தையை குறிக்கும் நாகரீகமான சொல். வேட்டையாடுதலில் மனிதனுக்கு இருக்கும் ஆர்வம் பின்னாளில் அவைகளை சோதனை உயிரியாக மாற்றம் செய்தான். கொடூரமாக இவ்வுயிரிகளை கொலை செய்வதை ஞாயப்படுத்த சில காரணங்கள் தேவையாக இருந்தன என நினைக்கிறேன். உணவு பயன்பாட்டிற்குபின் உள்ளுறுப்புகளின் மீச்சத்தை சோதனை செய்ய ஆரம்பித்திருப்பான். அறிவியலாக பரிணமித்த உடற்கூறுயியலின் மற்றொரு வடிவம் சோதனை உயிரி. மருந்தகங்களில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை முதலில் சிறு உயிரிகளுக்கு கொடுத்து அதன் எதிர்வினைகளை எழுதிவைத்தார்கள். நோய் இல்லாத உயிரிகளை நோய் உண்டாக்கி மருந்துகளை கொடுத்து குணமாகிறதா என்று பார்க்க ஆரம்பித்தார்கள். பல உயிரிகள் பயன்பட்டாலும் எலி பிரதானமாக அமைந்தது, அதுவும் குறிப்பிட்ட வகை எலிகள் இதில் அதிகம். முக்கியமாக அதன் சிறிய அளவு ஒரு காரணமாக இருந்தது.

Wednesday, March 25, 2020

பதின்வாழ்க்கை: கால‌த்துகளின் இயர் ஜீரோ



பள்ளி வாழ்க்கையை நினைவு கூர்வதில் இருக்கும் ஆனந்தம் தன் நிகழ்கால துன்பங்களை மறப்பதற்குதான் என்று சொல்லப்படுவதுண்டு. மிக இளவயது பள்ளி நினைவுகள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் வளரும் பதின்பருவத்தில் ஏற்படும் நினைவுகள் பெரிய காலமாற்றத்தை நோக்கியதும், வயதடைவதை உடல்ரீதியாக உணர்ந்துக் கொள்வதும் நடக்கும் காலம் என்பதால் அதன் அதிர்வலைகளை நினைவுகளாக வைத்திருப்போம்

ஆறாவதில் பெரிய பள்ளிக்கு சென்றபோது ஆசிரியர்களை அவன் என்று தங்களுக்குள் விளித்து, சகட்டுமேனிக்கு திட்டிய சக மாணவர்களை கண்டு அதிர்ச்சியடைந்தது நினைவிருக்கிறது. அதற்கு முந்தைய காலங்களில் ஆசிரியர் என்பவர் குரு சிஷ்ய மரபின் தொடர்ச்சியாக இருந்ததை சொல்லும் மனிதர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பத்தாண்டுகளில் பதின்வாழ்க்கை-ஆசிரியர் தொடர்பு சமூக, பொருளியல் மாற்றங்களைப் பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கிறது. கிடைக்கப்போகும் வேலையை பொறுத்து படிக்கும் வகைகளுக்கு மதிப்பு கூடுவது குறைவதும் இருந்தது. பள்ளியின் தரம், ஆசிரியர்களின் தரம், எல்லாம் கவனத்தில் கொள்ளப்பட்டன. இன்றைய படிப்பு நேற்றைய மாணவர்களான பெற்றோர்களுக்கு புரியாததாகியது.

Tuesday, March 24, 2020

புரண்டு படுக்கும் உலகம்


பூமியின் முழுமையான புகைப்படம் எடுக்கப்பட்டதும், அதுவரை காணப்படாத நிலவின் மறுபக்கம் புகைப்படமாக எடுக்கப்பட்டதும், நிலவில் மனிதன் கால் வைத்த பின்தான் நிகழ்ந்தது. அதன்பின் தான் மனிதனுக்கு தனக்கு நிகரானவன் யாருமில்லை என்கிற எண்ணம் பித்தேறியது என நினைக்கிறேன். ஏனெனில் புரியாத வானை புரிந்துக் கொண்டுவிட்டேன் என்கிற ஆணவமும், அதிகாரமும் கைக்குள் வந்ததுவிட்டதாக நினைக்க ஆரம்பித்துவிட்டான். 70களிலிருந்து இந்த ஆணவம் தொடங்கி 90களில் வளரத்தொடங்கியது. அதன்பின்னால் தொடர்ச்சியாக மனிதன் செய்யாத அட்டூழியமில்லை என்று சொல்லலாம். ப்ளாஸ்டிக்கை எல்லா இடத்திலும் பரவவிட்டது, கடல் உயிரினங்களை கொன்று கடலை ஆக்கிரமித்தது. காடுகளை முழுமையாக ஆக்கிரமித்து நகர வளர்ச்சி என்ற பெயரில் சூரையாடி, எல்லா ஜீவராசி, மரங்கள், மலைகள், ஆறு, போன்றவைகளை காலி செய்து, இயற்கையை முடிந்தளவிற்கு ஒழுங்கின்மையை கொண்டுவந்து நிறுத்தியது மனிதன் தான்.

Monday, March 16, 2020

வளரும் விஷம்: நீலகண்டம் நாவல் விமர்சனம்



நவீன வாழ்க்கை களமான அடுக்கக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆட்டிச குழந்தையை வளர்ப்பது என்பது மிக சிக்கலான வாழ்க்கைமுறையை இன்று பெற்றோர்களுக்கு அளித்துள்ளது. கூட்டு குடும்பமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் ஆட்டிச குழந்தைகள் ஒரளவிற்கு பெரிய சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துவிடுகிறது. குழந்தைகளிடையே இருக்கும் ஏற்றதாழ்வுகள் பெரிதாக்கப்படாமல் இருப்பதால் நமக்கு பிரச்சனைகள் எதுவும் கண்களுக்கு தெரிவதில்லை.