Wednesday, January 22, 2020

மண்ணும் மனிதரும்: எதிர்பாராதவையின் ருசி



மூன்று தலைமுறை மனிதர்களை ஒரு நேர்கோட்டு பார்வையில் சந்திக்கும் தருணம் அமைவது வாழ்வில் மிகச் சில கணங்கள் மட்டுமே. எனக்கு தெரிந்த குடும்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு தலைமுறை வாழ்க்கையை தொலைத்ததும் அந்த குடும்ப தொடர்ச்சி அறுந்து கிணற்றில் பாதியில் தொங்கும் எட்டா கயிறு போல நின்றுவிடுகிறது. நான் சந்தித்த சத்திய மூர்த்தி என்கிற மனிதர் தன் தந்தையை போன்று வறுமையில் உழன்று எல்லா தோல்விகளையும் சந்தித்து மனைவி, மகள், சொத்து, வீடு எல்லாவற்றையும் இழந்து நின்ற கோலம் இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் மகள் வயிற்று பெண்ணால் அந்த குடும்பம் மேலே வரும்போது அவர் உயிருடன் இல்லை.

Monday, January 20, 2020

நாவலை ஏன் விமர்சிக்க வேண்டும்



நாவலை விமர்சிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதை படிக்கிற ஒவ்வொருவருக்கும் படிக்கும்போது ஏற்பட்டுவிடுகிறது. நாவலின் மீதான நேர்மறை எதிர்மறை கருத்துகளின் வழியாகவே அதை வாசிக்கிறார்கள். ஆனால் குறைவாக வாசிப்பை கொண்டிருக்கும் வாசகர்கள், பொதுவெளியில் நாவல் மீதான விமர்சனங்களை தவிர்த்து அதன் சிறப்பு கூறுகளை மட்டும் பேசினால் போதும் என கூறுவார்கள்.

மண்ணும் மனிதரும் விமர்சனம் - கலியபெருமாள் வீராசாமி


மண்ணும் மனிதரும் இது ஒப்பீடு அளவில் முக்கியமான காலத்தோடு ஒத்திசைவுள்ள நாவல் எனவும் சேர்த்துக் கொள்ளலாம் மண் எப்படி வெளியே உள்ளதை, விதைப்பதையும் நீரையும், உரம் ஆகியவற்றை உள்வாங்கி விதையை வளர்த்து மரம், செடி, கொடி ஆக்குகிறதோ மனித வாழ்வும் அப்படியே வெளிபடும் விஷயங்களில் மாறுபடுகிறோம் பாடுபட்டு உழைத்தால் பலன் உண்டு.