Thursday, January 31, 2019

இடம்பெயறும் நிலங்கள்: புலிநகக் கொன்றை

இடம்பெயறும் நிலங்கள்: புலிநகக் கொன்றை

நூற்றியைம்பது ஆண்டுகால வாழ்வை 900 பக்கங்களுக்கு வரும் நிகழ்வை 300 பக்கங்களில் பலஉள் மடிப்புகளாக வாசக பங்களிப்பை பெருமளவில் கோரும் ஒரு நாவல் புலிநகக் கொன்றை.

ஜனவரி'19 கூடல் கலந்துரையாடல்

எல்லா மாதங்களிலும் கூடல் கூட்டம் பற்றிய செய்திகளை எழுதிவிடவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இந்த வருடத்து ஆரம்ப கூட்டத்தை ஆரம்பித்தோம். கூட்டம் என்பது எப்போது 10 பன்னிரெண்டு பேர் தான். கநாசுவிலிருந்து செல்லப்பா வரையிலும், கலாபிரியாவிலிருந்து ஜெயமோகன் வரையிலும் இலக்கிய விவாதங்கள் எப்போது 10 நபர்களுக்குள்தான் இருந்திருக்கின்றன. நான், சாமிநாதன், கண்ணன் தில்லைநாதன், முருகன், அய்யனார் மற்றும் தனபால் ஆகிய அன்பர்கள்தான் இந்த மாதத்தில். சற்று தாமதமாக நந்தி செல்லதுரையும், சுந்தர்ஜியும் வந்து சேர்ந்துக் கொண்டார்கள்.

Monday, January 7, 2019

நிலமெல்லாம் ரத்தம் - பா.ராகவன்

ஒரு பகுதியின் வரலாற்றை, அம்மக்களின் வாழ்க்கைமுறைகளை அவர்களின் ஆட்சிமுறைகளை அறிந்துக் கொள்ள பல்வேறு வழிகள் இருக்கின்றன. அங்கு கிடைக்கும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஃபாசில்கள் என்று சில‌ வழிகளில் தெரிந்துக் கொள்ளமுடியும். பெரிய நாகரீகமாக வளர்ச்சியடைந்து பின் மறைந்த ஒரு சமூகத்தை காலம்காலமாக இப்படிதான் கண்டுகொண்டு வருகிறார்கள். இப்போதும் வாழும் சமூகமென்றால் அவர்களின் பழக்கவழக்கங்கள், பயன்படுத்தும் கருவிகள் போன்றவைகள் பயன்படும். தொடர்ச்சியாக இடம்பெயர்வில் இருந்த இரு சமூகங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மாறி மாறி வேவ்வேறு இடங்களில் வாழ்ந்து பின் ஒரு இடத்தில் ஒன்று சேர்வது சற்று அபூர்வமானது என்றே நினைக்கிறேன். அந்த அபூர்வ இரு இனங்கள் யூதர்களும், பாலஸ்தீனர்களும் தான்.

Tuesday, January 1, 2019

2018ல் வாசித்த நூல்கள்


வாசிப்பை நேசிக்காமல் இருக்க முடியாது என்று எந்த வயதில் நினைக்க ஆரம்பித்தேன் என சொல்வது கடினம். ஒருநாளைக்கு சில பக்கங்களாவது படித்துவிடுவது என்று வழக்கமானது மிக தற்செயல்தான். ஒவ்வொரு வருடமும் ஒரு திட்டமிடலுடன் ஒரு பட்டியலும் தயாராகிவிடுகிறது. ஆனால் அதிலிருந்து நூல்களின் தேர்வு அப்போதைய மனநிலையை பொருத்தது என நினைக்கிறேன். பாதியில் விட்டுவிட்ட நூல்கள்தான் அதிகம். சில காரணங்களுக்காக அவைகளை மனம் தொடரமுடியாமல் இருக்கும். ஒரேவகையான நூல்களை தொடர்ந்து வாசிப்பதும் அதனால்தான் என நினைக்கிறேன். இபுத்தகங்களினால் வாசிப்பு அதிகரித்திருக்கிறது. கண்கள் சோர்வடையாமல் இருப்பதால் தொடர்ந்து வாசிக்க முடிகிறது. பட்டியலில் இருந்த அபுனைவுகளில் பெரிய புத்தகங்களை அதிகம் வாசிக்கவில்லை என தோன்றுகிறது. சில வாசிக்காமல் பாதியில் இருப்பதும் ஒரு காரணம். இந்த ஆண்டிற்கு இதைவிட அதிகம் வாசிக்க வேண்டும் என்பதே இலக்கு. பார்க்கலாம்.
(e - இபுத்தகம்)